For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதுப்பொலிவு பெற்ற சேப்பாக்கம் மைதானம்.. அடுத்த போட்டி எப்போது? புதிய அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

சென்னை சேப்பாக்கம் மைதானம் புதுப்பொலிவுடன் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த தயாராகிவிட்டது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானமும் ஒன்று.

இந்திய அணியின் பல வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகள் இந்த மைதானத்தில் தான் நடைபெற்றுள்ளன.

ஜெயிச்சுட்டோம் மாறா.!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி.. கிடைக்கப்போகும் பல நன்மைகள் ஜெயிச்சுட்டோம் மாறா.!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி.. கிடைக்கப்போகும் பல நன்மைகள்

கட்டுமானப்பணிகள்

கட்டுமானப்பணிகள்

இத்தகைய சிறப்புமிக்க சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஒரு சர்வதேச போட்டிகள் கூட நடைபெறாமல் உள்ளது. ஐபிஎல் தொடர் கூட நடைபெறவில்லை. சேப்பாக்கம் மைதானத்தின் பெவிலியன்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததால் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியிருந்தது.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் மைதானத்தின் அனைத்து கட்டுமானப்பணிகளும் முடிவுக்கு வந்துள்ளது. அனைத்து பெவிலியன்களையும் பயன்படுத்தும் வகையிலும், சர்வதேச அளவில் புதிய வசதிகள் என புத்தம் புதிய பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகியுள்ளது.

 அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இதனையடுத்து இந்த மைதானத்தில் அடுத்ததாக நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஒரு போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு தொடர்

உள்நாட்டு தொடர்

இதே போல 2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியா அணியானது சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் மோதவிருக்கிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு போட்டிகள் சில இங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.

Story first published: Monday, August 15, 2022, 15:43 [IST]
Other articles published on Aug 15, 2022
English summary
Chennai Chepauk Stadium’s Renovation works are over, here is the next match details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X