சென்னையில் நடந்த பெரிய மாற்றம்.. விக்கித்துப்போன இங்கிலாந்து டீம்.. இந்திய அணியின் மாஸ்டர் பிளான்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டி சென்னையில் நடக்க உள்ளது. சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது.

குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக தவறான பேச்சு.. சர்ச்சையில் இந்திய வீரர் அஸ்வின்..போலீசில் புகார்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாக வேண்டும் என்பதால் இந்திய அணி இங்கிலாந்து தொடரில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் இப்படி கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.

தேதிகள்

தேதிகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சென்னையில் நடக்கும் போட்டிக்காக பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இந்திய பிட்ச் பொதுவாக பிளாட்டாக வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சென்னை பிட்சை பச்சை நிறத்தில் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாற்றி வைத்துள்ளனர். இங்கிலாந்து அணியில் பெரிய அளவில் ஸ்பின் பவுலர்கள் இல்லை.

ஸ்பின்

ஸ்பின்

இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலர்கள் இப்போது பெரிய அளவில் பார்மில் இல்லை. ஆனால் இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய மூன்று முக்கிய ஸ்பின் பவுலர்கள் உள்ளனர். இதனால் சென்னையை வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் என்று இந்திய அணி நம்புகிறது. சென்னை பிட்சை இதற்காக மாற்றி உள்ளனர். இந்த மாற்றம் இங்கிலாந்து அணியை இப்போதே கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

 சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

கடந்த இரண்டு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து சென்னை பிட்சை இந்திய அணிக்கு தகுந்தபடி மொத்தமாக மாற்றியுள்ளனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் ஆடுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Chennai Pitch will play a major role for first two tests of India vs England series.
Story first published: Monday, January 25, 2021, 10:08 [IST]
Other articles published on Jan 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X