''பழைய ரெக்கார்ட்ஸ் பாரு தம்பி''.. பரபரத்த மீம்ஸ்கள்.. மும்பை ரசிகர்களை வச்சி செய்த சி.எஸ்.கே பேன்ஸ்

சென்னை: கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நடப்பு சீசன் ஐ.பி.எல் போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்திலேயே அனல் பறந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தியது.

Mumbai Indians-ஐ வீழ்த்தி பழிதீர்த்தது CSK.. Points Table-லும் முதலிடம்

ஒற்றை ஆளாய் போராடி சி.எஸ்.கே.வை மீட்டெடுத்த ருத்ராஜ்.. எல்லாமே தரமான ஷாட்கள்.. மிக தரமான இன்னிங்ஸ்! ஒற்றை ஆளாய் போராடி சி.எஸ்.கே.வை மீட்டெடுத்த ருத்ராஜ்.. எல்லாமே தரமான ஷாட்கள்.. மிக தரமான இன்னிங்ஸ்!

முன்னதாக இந்த ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பிருந்தே சி.எஸ்.கே-மும்பை அணி ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பித்தனர்.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 8 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. இதற்காகவே காத்திருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சி.எஸ்.கே.வை மீம்ஸ்களால் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். வடிவேலு ஒரு கடையில் அரிசி வாங்குவது போல் இருக்கும் பிரபலமான காமெடி காட்சி ஸ்டில்களை வைத்து ''அண்ணா ரெண்டு கிலோ பிபி மாத்திரைகள் கொடுண்ணா'' என்று சி.எஸ்.கே.வை கலாய்த்தனர்.

தலைகீழாக மாறியது

தலைகீழாக மாறியது

இதேபோல் சார்பட்டா பரம்பரை திரைப்பட காட்சியை வைத்து, ' என்ன ரங்கா.. பல்டான்சுக்கு கேட்ச் பிராக்டிஸ் கொடுக்குறியா' என்று ஒரு நெட்டிசன் சென்னை ரசிகர்களை கதற வைத்தார். சிஎஸ்.கே ரசிகர்கள் இந்தியாவில் இப்படி, சிஎஸ்.கே ரசிகர்கள் வெளிநாட்டில் இப்படி என்று ஒரு சிலர் கிண்டல் செய்து தள்ளினார்கள். ஆனால் ருத்ராஜ் கெய்க்வாட் சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டு அசுரத்தனமாக ஆடத்தொடங்கிய பின்னர் மீம்ஸ் பக்கமும் தலைகீழாக மாறியது.

சி.எஸ்.கே ரசிகர்கள் பதிலடி

சி.எஸ்.கே ரசிகர்கள் பதிலடி

பின்னர் சென்னை அணியின் வெற்றி, ருத்ராஜ் கெய்க்வாட் ஆட்டத்தை வைத்து சி.எஸ்.கே ரசிகர்கள் மீம்ஸ்களால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை போட்டு புரட்டியெடுக்க ஆரம்பித்து விட்டனர். ஒருவர் மும்பை அணி ஹெல்மெட் அணிந்தபடி படுக்கையில் சீரியஸாக கிடப்பதை வைத்து ''இதுதான் இப்போதைய மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் நிலை'' என்று ஒரு நெட்டிசன் பகிர்ந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சார்பாட்டா பரம்பரை

சார்பாட்டா பரம்பரை

முதல் பாதியில் மும்பை ரசிகர்கள் சார்பாட்டா பரம்பரை காட்சியை வைத்து கலாய்த்தது போல, இறுதியில் சென்னை ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸை சார்பாட்டா பரம்பரை காட்சி மீம்ஸ்ஸை வைத்து படாதபாடு படுத்தி எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 21/4 -ல் இருந்து 156/6 -க்கு சென்றதை வைத்து ரஜினியின் சிவாஜி திரைப்படத்தை வைத்து மீம்ஸ் போட்டுள்ள ஒருவர், '' சென்னை பழைய ரெக்கார்ட்ஸ் எடுத்து பாரு'' என்று போட்டுள்ளார். பாகுபலி படத்தின் சில காட்சிகளை வைத்தும் சென்னை ரசிகர்கள் மும்பை ரசிகர்களை மீம்ஸ்களால் வாட்டி வதைத்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Chennai Super Kings fans and Mumbai Indians fans clashed with memes. Chennai fans captivated Mumbai fans with memes while keeping some scenes of bahubali movie
Story first published: Monday, September 20, 2021, 13:09 [IST]
Other articles published on Sep 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X