For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை vs கொல்கத்தா.. செம்மையான பைனல்.. பலம் என்ன?.. பலவீனம் என்ன?.. ஓர் அலசல்!

துபாய்: நடப்பு ஐ.பி.எல் சீசன் இறுதிப்போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று இரவு துபாயில் நடைபெற உள்ளது. கடந்த சீசனில் படுதோல்வி அடைந்த சி.எஸ்.கே இந்த தொடரில் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து இறுதி போட்டி வரை வந்து விட்டது.

கொல்கத்தாவும் சி.எஸ்.கே.வுக்கு சளைத்தது அல்ல. இந்தியாவில் நடந்த முதல் பாதியில் படுதோல்வி அடைந்து ஏறக்குறைய வெளியேறும் நிலையில் இருந்த கொல்கத்தா இரண்டாம் பாதியில் வெறிகொண்டு விளையாடி பைனலுக்கு வந்து விட்டது.

சிஎஸ்கேவுக்கு எதிராக பிரமாஸ்திரம்.. ஸ்பெஷல் வீரரை களமிறக்கும் கேகேஆர்.. கடைசி நேர ட்விஸ்ட்! சிஎஸ்கேவுக்கு எதிராக பிரமாஸ்திரம்.. ஸ்பெஷல் வீரரை களமிறக்கும் கேகேஆர்.. கடைசி நேர ட்விஸ்ட்!

ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ்

ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ்

கொல்கத்தா, சென்னை அணிகளின் பலம், பலவீனம் என்ன? என்பது பற்றி இப்போது காண்போம். முதலில் தல தோனி தலைமையிலான சென்னை அணி பற்றி பார்ப்போம். சென்னை அணியின் முதுகெலும்பே ஒப்பனர்கள்தான் ருத்ராஜ் கெய்க்வாட், டூ பிளிசிஸ் 8 ஓவர்கள் நிலைத்து நின்று விட்டால் போதும். சென்னை அணியின் வெற்றி உறுதி.

தோனியின் தலைமை பண்பு

தோனியின் தலைமை பண்பு

அடுத்ததாக தோனியின் தலைமை பண்பு. இக்கட்டான நேரத்தில் சரியான முடிவெடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வது மிகப்பெரிய பலமாகும். ஹசல்வுட், ஷர்துல் தாகூர் தொடர்ந்து நிலையாக நல்ல முறையில் பந்துவீசி வருவது அணிக்கு சாதகமான அம்சமாகும். மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் தடுமாறுவது பலவீனமாகும். உத்தப்பாவும் தொடர்ச்சியாக சறுக்கி கடைசி போட்டியில்தான் ரன் அடித்துள்ளார். அவர் நிலையாக விளையாடுவது அவசியம்.

வெங்கடேஷ், கில்

வெங்கடேஷ், கில்

அடுத்ததாக கேப்டன் தோனியின் பார்ம். தோனியின் கேப்டன்சி அணிக்கு எந்த அளவுக்கு பலமாக இருக்கிறதோ, அவரது பேட்டிங் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. 15 போட்டிகளில் வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த போட்டியில் எழுச்சி பெற்றதுபோல் இந்த போட்டியிலும் அவர் ரன் சேர்பப்து அவசியம். கொல்கத்தா அணியின் பலமும் ஓப்பனர்கள்தான். அதிரடியாக விளையாடி வெறும் வெங்கடேஷ், கில், ராணா, திரிபாதி நம்பிக்கை சேர்க்கினறனர்.

மோர்கனின் சொதப்பல் பார்ம்

மோர்கனின் சொதப்பல் பார்ம்

கொல்கத்தாவின் பெரும் பலமே ஸ்பின்னர்கள்தான். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் அல் ஹஸன் மூவர் கூட்டணி சிறப்பாக பந்துவீசி விட்டால் போதும். சென்னை அணி வெறும் கையோடு திரும்ப வேண்டியதுதான். கொல்கத்தா அணிக்கு பெரும் பலவீனம் கேப்டன் மோர்கன்தான். தொடர்ந்து சொதப்பி வரும் அவர் கடைசி போட்டியிலாவது அசத்த வேண்டியது அவசியம். இதேபோல் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Story first published: Friday, October 15, 2021, 18:34 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
The final of the current IPL season is set to take place in Dubai tonight amid great anticipation from fans. CSK, which failed last season, rose to become the Phoenix bird in the series and reached the final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X