For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட எளிமை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... 'தல' குறித்து சொல்கிறார் தாப்பா

டெல்லி : தோனியின் எளிமை பண்பு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக சென்னையின் எஃப்சி மிட் பீல்டர் அனிருத் தாப்பா சிலாகித்துள்ளார்.

சென்னையின் எஃப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவராக மகேந்திர சிங் தோனி உள்ளார். இந்த அணி, இந்திய சூப்பர் லீக் தொடரை கடந்த 2015 மற்றும் 2017-18 சீசன்களில் வென்றுள்ளது.

இந்நிலையில், அணி வீரர்களுடன் மதிய உணவு அருந்திக் கொண்டே, அவர்களுடன் தன்னுடைய கிரிக்கெட் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்த பல்வேறு அனுபவங்களை நெருக்கடிகளை தோனி பகிர்ந்து கொள்வார் என்று தாப்பா தெரிவித்துள்ளார்.

மகனே.. நான் உனக்கு கேப்டன்.. தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பாகி எகிறிய தோனி!மகனே.. நான் உனக்கு கேப்டன்.. தப்பு செய்துவிட்டு பொய் சொன்ன ஷமி.. செம கடுப்பாகி எகிறிய தோனி!

உரிமையாளர் எம்எஸ் தோனி

உரிமையாளர் எம்எஸ் தோனி

தன்னுடைய கூலான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் தனக்கான லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் கடந்த 2015 மற்றும் 2017-18 சீசன்களின்போது இந்திய சூப்பர் லீக் தொடரை வென்ற சென்னையின் எஃப்சியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார். பல்வேறு தளங்களிலும் சிறப்பாக இயங்கி வருகிறார்.

'தல' தோனி குறித்து தாப்பா

'தல' தோனி குறித்து தாப்பா

இந்நிலையில், தோனியின் எளிமை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சென்னையின் எஃப்சி மிட்பீல்டர் அனிருத் தாப்பா தெரிவித்துள்ளார். அணி வீரர்களுடன் மதிய உணவு வேளைகளின்போது ஒன்றாக அமர்ந்து அவர்களிடம் தன்னுடைய கிரிக்கெட் மற்றும் சொந்த வாழ்க்கையில் தான் சந்தித்த நெருக்கடிகளை தோனி பகிர்ந்து கொள்வார் என்றும் அவர் சிலாகித்துள்ளார்.

உலக கோப்பை வெற்றி

உலக கோப்பை வெற்றி

தனக்கு மிகவும் பிடித்த வீரர் தோனி தான் என்றும் அனிருத் தாப்பா கூறியுள்ளார். கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக கால்பந்து விளையாடிவரும் தாப்பா இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக கோப்பையின் வெற்றி குறித்த தோனியின் இன்ஸ்டாகிராம் பகிர்வை தான் பார்த்ததாகவும் அவர் எப்படி மிகச்சிறந்த வெற்றியாளராக உள்ளார் என்பது குறித்து அறிந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பெற்றோருக்கு பெருமை

பெற்றோருக்கு பெருமை

இந்திய அணியின் அன்டர்-22 கேப்டனாக தான் நியமிக்கப்பட்டபோது, தான் அதற்கு தகுதியானவனா என்பது குறித்து தனக்கு தெளிவு ஏற்படவில்லை என்றும், போட்டிக்கு முன்னதாக தன்னுடைய பெற்றோரிடம் பேசியபோது அவர்களிடம் இதுகுறித்து பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். போட்டியை டிவியில் பார்த்தே அவர்கள் தெரிந்து கொண்டதாகவும், அந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் தன்னுடைய பெற்றோரை பெருமை கொள்ள செய்ததாகவும் தாப்பா மேலும் கூறினார்.

Story first published: Sunday, May 10, 2020, 15:20 [IST]
Other articles published on May 10, 2020
English summary
MS Dhoni's 'down to earth Attitude - Chennaiyin FC player Anirudh Thapa loves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X