For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிட்சா இது...? இதுக்கு முன்னாடி இப்படி நான் பார்த்ததே இல்ல... புலம்பி தள்ளிய தோனி

சென்னை:பிட்ச்சுன்னு இருக்க வேண்டியது தான்... அதற்காக இப்படியா அமைப்பது, இதுபோன்ற பிட்ச்சுகளை நான் பார்த்ததே இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புலம்பி தள்ளி இருக்கிறார்.

12வது ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதலாவது ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதின.

இரண்டுமே வலிமையான அணிகள் என்பதால் முதல் ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்.. நடந்ததோ அதற்கு நேர்மாறாக இருந்தது.

ஐபிஎல்லில் அடி கொஞ்சம் ஓவரோ...!! வடிவேலு பட பாணியில் தமிழில் டுவீட் செய்த ஹர்பஜன் ஐபிஎல்லில் அடி கொஞ்சம் ஓவரோ...!! வடிவேலு பட பாணியில் தமிழில் டுவீட் செய்த ஹர்பஜன்

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு சுருண்டது. குறைந்த ன இந்த ஸ்கோரை எட்டட சிஎஸ்கே அணி 17.4 ஓவர்கள் எடுத்து கொண்டது. ஒரு வழியாக 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

புலம்பிய தோனி

புலம்பிய தோனி

போட்டிக்கு பின், சிஎஸ்கே கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் புலம்பி தள்ளிவிட்டார். அவர் கூறியதாவது:

இப்படி ஒரு பிட்சை நான் பார்த்ததே இல்லை. முக்கியமான ஆடுகளத்தில் எப்படி பேட் செய்ய முடியும், பந்துகள் மெதுவாக வருகின்றன. 2011ம் ஆண்டு சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி மைதானம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஆடுகளம் கடினம்

ஆடுகளம் கடினம்

கடந்த ஐபிஎல் போட்டிக்கு பின், ஆடுகளம் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்று நினைச்சோம். அதுக்காக.. இப்படி கடினமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

ஆடுகளமானது பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்கோர் அடிக்கும் வகையில் இருக்க வேண்டும். எதிர்த்து விளையாடும் மற்ற அணிகளும் ஆடுகளம் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

சேப்பாக்கத்தில் 150 ரன்கள் வரை குறைந்தபட்சம் எதிர்பார்த்தோம். ஆனால், 90 முதல் 120 ரன்கள் மிகவும் குறைவானது. தரமான ஸ்பின்னர்கள் பந்துவீசினால் கூட அடித்திருக்க முடியாது.

பயிற்சியில் இல்லை

பயிற்சியில் இல்லை

பயிற்சியின் போது இப்படி பந்துகள் சுழலவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், பயிற்சி ஆட்டத்தில் அடித்த ஸ்கோரை விட 30 ரன்கள் வரை அதிகமாக எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் நடந்ததோ வேறு.

நிலைமை

நிலைமை

ஆடுகளம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஒருவேளை நாங்கள்முதலில் பேட் செய்திருந்தால், நிலைமை முற்றிலும் மாறியிருக்கும். ஒருவேளை ஆடுகளம் இன்னும் தரமாக அமைந்திருந்தால், போட்டியின் சூழலே மாறி இருக்கும் என்றார்.

Story first published: Sunday, March 24, 2019, 13:09 [IST]
Other articles published on Mar 24, 2019
English summary
Chepauk pitch needs to be a lot better says Chennai super kings captain Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X