சேத்தன் சகரியாதான் இந்த ஐபிஎல்லுல சிறப்பு... என்னோட சாய்ஸ் அவர்தான்... மோரீஸ் உற்சாகம்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகரியா இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

ஏழு போட்டிகளில் விளையாடிய அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

செம டென்ஷன்.. ஐபிஎல் விமர்சனங்களுக்கு கங்குலி சரமாரி பதிலடி.. அவர் சொல்றது நியாம்தானா?.. விவரம்!

இந்நிலையில் அவர் குறித்து சக தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான ராஜஸ்தான் அணி

சிறப்பான ராஜஸ்தான் அணி

ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓரளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. போட்டி தள்ளி வைக்கப்படுவதற்கு முன்னதாக 7 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 3 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் கண்டுள்ளது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது.

சிறப்பான பௌலிங்

சிறப்பான பௌலிங்

இதேபோல அந்த அணியின் இளம் பௌலர் சேத்தன் சகரியாவும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சிறப்பான பௌலிங்கையும் வெளிப்படுத்தி எதிரணி வீரர்களுக்கு சிறப்பான ஸ்டப் கொடுத்திருந்தார்.

கிறிஸ் மோரீஸ் பாராட்டு

கிறிஸ் மோரீஸ் பாராட்டு

இந்நிலையில் இந்த தொடரின் சிறப்பான வீரராக தான் சேத்தன் சகரியாவை கருதுவதாக அந்த அணியின் தென்னாப்பிரிக்க பௌலர் கிறிஸ் மோரீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கிறிஸ் மோரீஸ் இந்த தொடரில் சகரியாவை விட அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் அவர் இத்தகைய கமெண்ட்டை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கான ஓட்டம்

வெற்றிக்கான ஓட்டம்

ஐபிஎல் 2021 தொடரை ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் வெற்றியை நோக்கிய தங்களது பயணத்தில் மிகவும் தீவிரமாக முன்னேறின. வெற்றி வாய்ப்புகள் அனைத்து அணிக்கும் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டது.

தள்ளி வைக்கப்பட்ட தொடர்

தள்ளி வைக்கப்பட்ட தொடர்

சிறப்பான அனுபவத்தை ஐபிஎல் போட்டிகள் இந்த சீசனில் ரசிகர்களுக்கு தந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் ஓரளவிற்கு தீர்ந்தவுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா அல்லது யூஏஇ போன்ற இடங்களில் நடத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The Story About Chris Morris And His Choice For Find Of The IPL 2021 Tournament- Chetan Sakariya
Story first published: Thursday, May 6, 2021, 14:40 [IST]
Other articles published on May 6, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X