For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய முட்டையை வாங்கிய புஜாரா.. வேலைக்கே ஆகாத நடுவரிசை.. இங்கிலாந்து தொடரில் காத்திருக்கும் அவமானம்

லெஸ்டர்: இங்கிலாந்து உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன?? இங்கிலாந்து அணிக்காக ஆடும் 4 இந்திய வீரர்கள்.. டிராவிட்டின் சூப்பர் ப்ளான்.. காரணம் என்ன??

கடைசி டெஸ்ட்டில் இந்தியா வென்றாலோ இல்லை சமன் செய்தாலோ தொடரை வென்று விடும்.ஆனால் தோற்றால், தொடர் சமனாகிவிடும்.

பலவீனமான பேட்டிங்

பலவீனமான பேட்டிங்

இதனால வரும் 1ஆம் தேதி தொடங்க உள்ள இந்தப் போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை கடும் மோசமாக உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த முறை ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் காப்பாற்றினர். தற்போது ராகுல் இல்லை.

நடுவரிசை

நடுவரிசை

ரோகித் சர்மாவும் பயிற்சி ஆட்டத்தில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் தற்போது புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே உள்ளனர். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால், இந்த நடுவரிசை வீரர்கள் யாராவது 2 பேர் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும்.

புஜாரா டக் அவுட்

புஜாரா டக் அவுட்

அதற்கு பயிற்சி ஆட்டம் நல்ல அனுபவதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தற்போது தலைக்கீழாக நடந்துவிட்டது. கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ந்த சதங்களை விளாசி வந்த புஜாரா, வெறும் 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு முகமது ஷமி பந்துவீச்சில் கிளின் போல்ட் ஆனார்.

இளம் வீரர்கள் ஏமாற்றம்

இளம் வீரர்கள் ஏமாற்றம்

சரி, விஹாரியாவது காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 3 ரன்களில் பெவிலியக்ன திரும்பினார். மற்றொரு இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட் ஆனார். விராட் கோலி மட்டும் போராடி 33 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழந்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில், அதுவும் உள்ளூர் வீரர்களுக்கு எதிராகவே இந்தியா இப்படி விளையாடுகிறது என்றால், உலகத் தர பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ள போகிறத என்று நினைத்தாலே கலக்கம் வருகிறது.

Story first published: Friday, June 24, 2022, 16:31 [IST]
Other articles published on Jun 24, 2022
English summary
Cheteshwar Pujara duck out in Practice match make things worse பெரிய முட்டையை வாங்கிய புஜாரா.. வேலைக்கே ஆகாத நடுவரிசை.. இங்கிலாந்து தொடரில் காத்திருக்கும் அவமானம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X