For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம புஜாராவா இது.. 73 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்.. ஒரே ஓவரில் 22 ரன்கள் எடுத்த டெஸ்ட் நாயகன்

பிர்மிங்காம்: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக கருதப்படும் புஜாரா 73 பந்துகளில் சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.

100 பந்துகளை எதிர்கொண்டாலும், 20 ரன்கள் மட்டுமே அடித்து பீந்துவீச்சாளர்களை வெறுப்பு அடைய செய்வதில் புஜாராவை மிஞ்ச ஆளே கிடையாது.

புஜாராவை சிஎஸ்கே அணி கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுத்த போது கூட பலரும் விமர்சித்தனர்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

ராயல் ஒருநாள் கோப்பை

ராயல் ஒருநாள் கோப்பை

இந்த நிலையில், புஜாரா இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் சதமாக விளாசி வந்தார். டெஸ்ட் போட்டியில் இது புஜாராவுக்கு கை வந்த கலை தான், ஆனால், ஒருநாள் போட்டியில் அதுவும் 73 பந்துகளில் சதம் விளாசினார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நடைபெற்றது.

311 ரன்கள் இலக்கு

311 ரன்கள் இலக்கு

பிர்மிங்காமில் நடைபெற்ற வார்விக்சயர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சஸ்சக்ஸ் அணிக்காக புஜாரா களமிறங்கினார். இதில் முதலில் களமிறங்கிய வார்விக்சயர் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சஸ்சக்ஸ் அணியில் புஜாரா 4வது வரிசையில் களமிறங்கினார்.

ஒரே ஓவரில் 22 ரன்கள்

ஒரே ஓவரில் 22 ரன்கள்

எப்போதும் நிதானமாக விளையாடும் புஜாரா, இம்முறை கொஞ்சம் நங்கூரம் போட்டு சும்மா நிற்காமல் அதிரடியை காட்டினார். குறிப்பாக, ஆட்டத்தின் இறதி தருவாயில் புஜாரா விளையாடியதை பார்த்து ரசிகர்களே மிரண்டு விட்டனர். குறிப்பாக 6 ஓவருக்கு 70 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதில் புஜாரா மட்டும் தனியாக 22 ரன்களை விளாசினார். 4,2,4,2,6,4 என 6 பந்துகளையும் பறக்கவிட்டார்.

73 பந்துகளில் சதம்

73 பந்துகளில் சதம்

இதன் மூலம் 73 பந்துகளில் புஜாரா சதம் விளாசினார். 107 ரன்கள் அடித்த நிலையில் புஜாரா பெவிலியன் திரும்பினார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். புஜாரா ஆட்டமிழந்த உடன் சஸ்சக்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வார்விக்சயர் அணிக்காக விளையாடிய மற்றொரு இந்திய வீரர் குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Saturday, August 13, 2022, 16:20 [IST]
Other articles published on Aug 13, 2022
English summary
Cheteshwar Pujara hits 73 ball century in Royal one day cup நம்ம புஜாராவா இது.. 73 பந்துகளில் சதம் விளாசி அசத்தல்.. ஒரே ஓவரில் 22 ரன்கள் எடுத்த டெஸ்ட் நாயகன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X