For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இதில் ஒரு பெருமையா?”.. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த புஜாரா.. விளாசி தள்ளும் ரசிகர்கள்!

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Recommended Video

Shubman Gill கண்டிப்பா இருப்பாரு.. New Zealand தொடருக்கு Pujara கொடுத்த Update

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய சீனியர் வீரர்களின் சொதப்பலால் வெற்றி வாய்ப்பு குறைந்து வருகிறது.

“தப்பு பண்றாங்க” விதிமுறையை மீறிய புதிய அணி? பிசிசிஐ-யிடம் சென்ற 2 பழைய அணிகள்.. விரைவில் நடவடிக்கை“தப்பு பண்றாங்க” விதிமுறையை மீறிய புதிய அணி? பிசிசிஐ-யிடம் சென்ற 2 பழைய அணிகள்.. விரைவில் நடவடிக்கை

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியில் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதைய அணியில் சீனியர்களாக இருக்கும் கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இருவருமே மீண்டும் ஒருமுறை சொதப்பியுள்ளனர்.

புஜாராவின் சொதப்பல்

புஜாராவின் சொதப்பல்

இதில் குறிப்பாக சட்டீஸ்வர் புஜாரா தனது மெதுவான ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். முதல் இன்னிங்சில் நிதானமாகா விளையாடிய அவர் 26 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். 2வது இன்னிங்ஸிலும் அதே கதை தொடர்ந்தது போன்று 22 ரன்களுக்கு நடையை கட்டி ஏமாற்றினார். கடந்த 2 ஆண்டுகளாகவே புஜாராவின் ஆட்டம் இப்படி தான் சொதப்பலாக உள்ளது. இதனால் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

சாதனை

சாதனை

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ஒரு மோசமான சாதனை ஒன்றையும் புஜாரா படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 3-வது வீரராக களமிறங்கி அதிக இன்னிங்சில் சதம் அடிக்காத வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் அஜித் வடேகர் இருந்து வந்தார். 1968 முதல் 1974 வரை 39 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் சதமடிக்காமல் இருந்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது புஜாரா கடந்து 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 39 இன்னிங்ஸ்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் சமன் செய்துள்ளார். கிட்டத்தட்ட 20 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஸ்ரேயாஸ்

ஸ்ரேயாஸ்

அநேகமாக சட்டீஸ்வர் புஜாராவுக்கு நியூசிலாந்து தொடர் தான் கடைசி போட்டியாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் 2வது டெஸ்ட் போட்டி முதல் அவர் தான் முதல் விக்கெட்டிற்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, November 29, 2021, 20:57 [IST]
Other articles published on Nov 29, 2021
English summary
Cheteshwar Pujara scripts worst record in 1st Test against newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X