பாகிஸ்தான் அணியில் சீன வீரர்கள்

By Staff

லாகூர்: சீனா, பாகிஸ்தான் இடையே நல்ல அரசியல் உறவு உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில், பாகிஸ்தான்தான் சூப்பர் லீக், எனப்படும் பி.எஸ்.எல்., டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.

பி.எஸ்.எல்., முதல் சீசனில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது சீசனில், பெஷாவர் ஜால்மி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தற்போது மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களாக பாகிஸ்தானில் விளையாட சர்வதேச அணிகள் மறுத்து வருகின்றன. கடந்த. பி.எஸ்.எல்., போட்டிகள், யு.ஏ.இ.,யில் நடந்தன.

தற்போது நடக்க உள்ள மூன்றாவது சீசனில், நடப்பு சாம்பியன் பெஷாவர் ஜால்மி அணியில், சீன கிரிக்கெட் வீரர்கள் இருவர் விளையாட உள்ளனர்.

உலகில் அதிக மக்கள்தொகை நாடுகளில் முதலிடத்தில் உள்ள சீனாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் உள்ளன. ஆனால், சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை.

சீனாவில் கிரிக்கெட் பிரபலப்படுத்தும் வகையில், அதன் இரண்டு வீரர்களை பெஷாவர் ஜால்மி அணியில் சேர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம், சீனாவில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இதைத்தவிர, பாகிஸ்தான் அணிக்கான போட்டிகள், யு.ஏ.இ., அல்லது வேறு நாடுகளில் நடக்கின்றன. இனி, சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Two chinese players to play for Peshawar Zalmi in the next Pakistan Super League cricket tournament
Story first published: Tuesday, August 22, 2017, 15:12 [IST]
Other articles published on Aug 22, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X