41 வயசானாலும் தன்னோட அதிரடியை குறைச்சுக்காத யூனிவர்சல் பாஸ்... 350 சிக்ஸ்களை அடித்து சாதனை!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்ததாக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடி காட்டினார்.

மேலும் இன்றைய போட்டியில் அவர் ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான சாதனையையும் புரிந்துள்ளார்.

முதலில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

முதலில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

அந்த அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக களமிறங்கிய யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில், அதிரடியாக 28 பந்துகளில் 40 ரன்களை குவித்து ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் பந்தில் அவுட்டாகியுள்ளார்.

கெயில் 350 சிக்ஸ்கள்

கெயில் 350 சிக்ஸ்கள்

முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் 350 சிக்ஸ்களை அதிரடியாக அடித்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை அவர் இன்றைய போட்டியின்மூலம் பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார். அடுத்ததாக ராகுல் டிவேட்டியா பந்தில் 351வது சிக்சையும் கெயில் அடித்து முடித்துள்ளார்.

முதல் வீரர்

முதல் வீரர்

ஐபிஎல்லில் 350 சிக்ஸ்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கெயில் தட்டி சென்றுள்ள நிலையில், இரண்டாவது வீரராக ஏபி டீ வில்லியர்ஸ் உள்ளார். அவர் 237 சிக்ஸ்களை மட்டுமே வைத்துள்ளார். இந்த பட்டியலில் 3வது வீரராக எம்எஸ் தோனி 216 சிக்ஸ்களுடன் உள்ளார்.

பூரன் பாராட்டு

பூரன் பாராட்டு

போட்டியின் துவக்கத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன், இன்றைய போட்டியில் கெயில் சூறாவளி தாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி இன்றைய போட்டியில் 28 பந்துகளில் 40 ரன்களை அடித்து அதிரடி கிளப்பினார் கிறிஸ் கெயில்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Punjab Kings batsman Nicholas Pooran hoped for a 'Gayle storm' ahead of the match
Story first published: Monday, April 12, 2021, 21:37 [IST]
Other articles published on Apr 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X