'காட்டடி' கெயில் vs 'கர்ணகொடூர' பொல்லார்ட் - ஐபிஎல்லில் 'முரட்டு' அடிக்கு யார் பாஸ்?

மும்பை: அதிரடிக்கு யாரையாச்சும் ரெண்டு பேரை கூட்டிட்டு வாங்க-னா இந்த ரெண்டு பேரை மட்டும் தான் கூட்டிட்டு வர முடியும். வேற ரெண்டுக்கெல்லாம்-ஆப்ஷனே இல்ல.

70'ஸ் கிட்ஸ், 80'ஸ் கிட்ஸ், 90'ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ்'னு எல்லோரும் ரக ரகமா, டிசைன் டிசைனா பல அதிரடி பிளேயர்ஸை பார்த்திருப்போம்.

'3' வருட பகை.. மீண்டும் நேருக்கு நேர்.. 'தகதக' மோடில்.. இந்திய மகளிர் கிரிக்கெட்

கில்கிறிஸ்ட், அஃப்ரிடி, டி வில்லியர்ஸ், தோனி, யுவராஜ், மெக்குல்லம், மேக்ஸ்வெல்-ன்னு நம்மளோட ஃபேவரைட் அதிரடி பிளேயர்ஸ் லிஸ்ட் எவ்வளவோ இருக்கும். ஆனால், இவர்கள் இருவர் மட்டும் எப்போதும் 'அதுக்கும் மேல' ரகம் தான்.

 நிர்வாகம் பொறுப்பல்ல

நிர்வாகம் பொறுப்பல்ல

'யுனிவர்சல் பாஸ்' என்று அழைக்கப்படும் க்றிஸ் கெயில்ட்ட சின்ன வயசுல 'Slow and Steady wins the race'-ங்கிறதுக்கு பதிலா, 'Steady and Fire wins the race' சொல்லிக் கொடுத்திருப்பாங்க போல. இவரது ஸ்டைல்.. பேட்டிங் இறங்கினா, முதல் 20 பந்துக்கு 11 ரன் அடிப்பது. அடுத்த 20 பந்துக்கு 55 ரன் போகும்.. அப்புறம் பேட்டுக்கு வர்ற பந்துக்கெல்லாம் நிர்வாகம் பொறுப்பல்ல. 2013ல், புனே வாரியர்ஸ்-னு ஒரு டீம். புள்ள பூச்சுக்கும் துரோகம் நினைக்காத அணி அது. எல்லோரிடமும் அன்பு பழகும் அணியும் கூட. யாரிடமும் ஜெயிக்காது. அந்த டீமுக்கிட்ட போய், இந்த மனுஷன் 66 பந்துல 175 ரன் அடிச்சாரு பாருங்க. 13 பவுண்டரி, 17 சிக்ஸ். ஸ்டிரைக் ரேட் 265.15

 நாடி, நரம்பு, இரத்தம்

நாடி, நரம்பு, இரத்தம்

நாடி, நரம்பு, இரத்தம்-னு சகலத்திலும் அதிரடி வெறி ஊறிப் போன ஒருத்தரால தான் இப்படி அடிக்க முடியும்-னு ஊரே அப்போ பேசுச்சு. அந்த அடியை இன்னமும், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியமும் மறக்கல, ஐபிஎல்-ல இன்னைக்கு இல்லைனாலும் புனே அணியில் அன்னைக்கு விளையாடின ஒவ்வொரு பிளேயர்ஸும் அதை மறக்கல. எப்படி மறக்க முடியும்? எல்லா மேட்சும் மாதிரி, அன்னைக்கு அவங்க ஃபீல்டிங் பண்ணி, கைக்கு அப்பப்போ பந்து வந்திருந்தா, அவங்களுக்கு அது வழக்கமான மேட்சா இருந்திருக்கும், அவங்களும் மறந்திருப்பாங்க. அன்னைக்கு தான் அவங்க கைக்கு பந்தே வரலையே. எல்லாம் ஆடியன்ஸுக்கு-ல போனுச்சு. ஆடியன்ஸ் புடிச்சு இவங்க கையில் பந்தை கொடுக்க, இவங்க பவுலர்ஸ்க்கு தூக்கி போடும் வேலையைத் தான் பார்த்தாங்க.

 வாண வேடிக்கை

வாண வேடிக்கை

இந்த மேட்ச் மட்டுமல்ல. காட்டடி கெயிலின் முரட்டு அடிக்கு எத்தனையோ மேட்சஸ் சான்றா இருக்கு. அதுல இந்த மேட்ச் வெறும் சாம்பிள் தான். இன்னைக்கு, அவரோட அதிரடியில் தொய்வு இருந்தாலும், ஜஸ்ட் 1 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடிக்கிட்டு இருக்கார். இன்னமும், கெயில் வாணவேடிக்கை காட்டமாட்டாரா என்று ஏங்கும் பல ரசிகர்கள் உண்டு.

 எப்படி போட்டாலும்

எப்படி போட்டாலும்

அடுத்து பொல்லார்ட். ஈவு, இரக்கம்.. இதெல்லாம் கிலோ எவ்ளோ-னு கேக்குற ரகம் இந்த கேரக்டர். அடிக்க ஆரம்பிச்சாச்சுன்னா நீங்க எப்படி போட்டாலும் பந்து பெவிலியன் தாண்டிக்கிட்டே இருக்கும். நீங்க மூஞ்ச எவ்ளோ பாவமா வச்சுக்கிட்டு அடுத்த பந்து போட்டாலும், அது சிக்சருக்கு தான். பாவம், புண்ணியத்துக்கெல்லாம் இங்க வேலையே இல்ல. எதிரணி இவரை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் அவுட் ஆக்குகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் தங்களை சேஃப் செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி சேஃப் செய்ய மறந்த தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இந்த ஐபிஎல் தொடரில் வான்கடேவில் வாங்கிக் கட்டிக் கொண்டதை யாராவது மறக்க முடியுமா?

 புத்திசாலி பேட்ஸ்மேன்

புத்திசாலி பேட்ஸ்மேன்

சென்னை சூப்பர் கிங்ஸ் 218 ரன். மும்பையோ, 81-3 என்று தத்தளிக்க, பொல்லார்ட் பேட்டில் இருந்து 34 பந்துகள்ல 87 ரன்கள் பறந்தது. 6 பவுண்டரி 8 சிக்ஸ். முடிஞ்சு!. 219 ரன் எடுத்து வெற்றி. தோனி அன்னைக்கு ஒண்ணுமே பண்ணலையே. பண்ண முடியல... என்ன பண்ணுறது! எப்படி போட்டாலும் பந்து மேலே பறக்கும். 10 பால் மேலே பறக்குதுன்னா, அதுல ஒண்ணாவது ஸ்டேடியத்துக்கு உள்ள விழும். பொல்லார்ட் அடிக்கிற பத்து பந்தும் கேலரியில் போய் தான் விழுது. அப்புறம் தோனி என்ன பண்ண முடியும். ஆனா ஒன்னு. வெறும் அதிரடி மட்டுமல்ல. கெயிலை விட கொஞ்சம் புத்திசாலியான பேட்ஸ்மேனும் கூட.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
chris gayle or pollard hardest hitter ipl -கெயில் பொல்லார்ட்
Story first published: Friday, May 14, 2021, 18:26 [IST]
Other articles published on May 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X