For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறும் 12 பந்துதான்.. யுவராஜ் சிங்கின் உலக சாதனை சமன்...!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் வெறும் 12 பந்துகளில் அரை சதமடித்து உலக சாதனையை சமன் செய்து விட்டார்.

டுவென்டி 20 போட்டிகளில் இது நாள் வரை இந்த சாதனையை இந்தியாவின் யவராஜ் சிங்தான் வைத்திருந்தார். தற்போது அதை சமன் செய்துள்ளார் கெய்ல்.

சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வந்த கெய்லுக்கு இந்தப் புதிய சாதனை சற்று ஆறுதல் தரும் என்று நம்பலாம்.

பிக்பாஷ் சீரிஸ்

பிக்பாஷ் சீரிஸ்

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டுவென்டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் சார்பில் ஆடி வருகிறார் கெய்ல்.

அடிலைடுக்கு எதிராக அதிரடி

இந்த நிலையில் டாக்லேன்ட்ஸ் ஸ்டேடியத்தில் அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெல்போர்ன் அணி மோதியது. இப்போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் போட்டார் கெய்ல்.

7 சிக்ஸ்..2 பவுண்டரி

7 சிக்ஸ்..2 பவுண்டரி

தான் சந்தித்த 12 பந்துகளில் அவர் 7 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 17 பந்துகளைச் சந்தித்து 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் கெய்ல்.

யுவராஜ் சாதனை சமன்

யுவராஜ் சாதனை சமன்

கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஐசிசி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது 12 பந்துகளில் அரை் சதம் போட்டு சாதனை படைத்திருந்தார் யுவராஜ் சிங். தற்போது அதை சமன் செய்துள்ளார் கெய்ல்.

ஒரு சிக்ஸ் கம்மி

ஒரு சிக்ஸ் கம்மி

யுவராஜ் சிங்கின் ஸ்கோரில் ஒரு சிக்ஸர் குறைவாகும். அதாவது 6 சிக்ஸர்தான் அடித்திருந்தார் அவர். கெய்லோ 7 சிக்ஸர் அடித்தார்.

Story first published: Monday, January 18, 2016, 17:11 [IST]
Other articles published on Jan 18, 2016
English summary
West Indies' explosive opening batsman Chris Gayle, who was in news in recent times for all the wrong reasons, blasted a 12-ball half century today (January 18) to equal the world record.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X