For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விமர்சனங்களுக்கு பதிலடி.. ஒரே ஓவரில் 5 சிக்ஸ்.. ஷகிப்பை கண்ணீர் விட வைத்த கிறிஸ்டியன் (வீடியோ)

டாக்கா: உலகின் டாப் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசனை எந்தவொரு பேட்ஸ்மேனும் இப்படி விளாசியிருக்க மாட்டார்கள்.

Recommended Video

Dan Christian Hits 5 Sixes in Shakib Al-Hasan Over | AUS vs BAN 4th T20 | OneIndia Tamil

ஆஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் போதாத காலம் தான். குறிப்பாக, டி20 தொடரில் அவர்கள் அடுத்தடுத்து அடி வாங்கி வருகிறார்கள்.

கடந்த மாதம் வெஸ்ட் இன்டீஸிடம் மோசமாக சீரிஸை தோற்ற ஆஸ்திரேலியா, இப்போது வங்கதேசத்திடமும் தொடரை இழந்து தள்ளாடி நிற்கிறது.

மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி மல்யுத்தத்தின் 50 கிலோ பெண்கள் ஆட்டம்.. 3:1 என்ற புள்ளி கணக்கில்.. இந்தியாவின் சீமா பிஸ்லா தோல்வி

 அடுத்தடுத்த தோல்வி

அடுத்தடுத்த தோல்வி

டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், பல அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்த டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா, டி20 தொடரை மிக மோசமாக தோற்றது. இந்த நிலையில், வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அடுத்தடுத்தது தோற்று தொடரை இழந்தது.

 தரமான சம்பவம்

தரமான சம்பவம்

இந்நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்த வெற்றி தொடரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அதிகமாக இப்போட்டி ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை. ஆனால், இதில் சப்தம் போடாமல் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 மோசமான பவுலிங்

மோசமான பவுலிங்

ஆம்! தன் வாழ்நாளில் மோசமான பவுலிங்கை, உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் ஷகிப் அல் ஹசன் பதிவு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓவரை வீச வந்த ஷகிப் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார், தனது ஓவர் இத்தனை டேமேஜ் ஆகும் என்று. முதல் பந்து சிக்ஸர். அடுத்த பந்து சிக்ஸர். 3வது பந்தும் சிக்ஸர். நான்காவது பந்து டாட். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தும் சிக்ஸர். அதாவது 6,6,6,0,6,6. மொத்தம் 30 ரன்களை அந்த ஓவரில் குவித்தார் டேன் கிறிஸ்டியன்.

 ஜஸ்ட் மிஸ்ஸான சாதனை

ஜஸ்ட் மிஸ்ஸான சாதனை

இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற காரணமாக, திருப்புமுனையாக அமைந்ததே இந்த ஓவர் தான். இப்படி ஒரே ஓவரில் 30 ரன்கள் விளாசியும், ஆஸ்திரேலியா 19வது ஓவரில் தான் வென்றது. அதுவும் 7 விக்கெட்டுகளை இழந்து. சர்வதேச கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்க வீரர் கிப்ஸ் 2007 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். அதன் பிறகு, டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில், யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டது பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கார்ஃபீல்ட் சோபர்ஸ் இவர்களுக்கெல்லாம் முன்பே இந்த சாதனையை படைத்தவர். தவிர, வெஸ்ட் இண்டீசின் பொல்லார்ட்டும் 6 சிக்ஸர்களை நொறுக்கியுள்ளார்.

 சொந்த மண்ணில் சுளுக்கு

சொந்த மண்ணில் சுளுக்கு

தற்போது டேனியல் கிறிஸ்டியன் ஒரேயொரு சிக்ஸரை தவறவிட்டதால், அந்த லிஸ்டில் இடம்பெறும் வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார். ஆனால், ஷகிப் முகமே செத்துப்போச்சு! ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு விளையாடி, அங்கு இப்படி சிக்ஸர் அடித்திருந்தால் கூட அவருக்கு பெரிதாக ஏதும் தெரிந்திருக்காது. சொந்த மண்ணில் வைத்து இப்படி கிறிஸ்டியன் துவைத்து எடுத்தது தான் அவருக்கு சோகம்! எது எப்படியோ. வங்கதேசம் தொடரை வென்றுவிட்டது. அந்த வகையில் ஹேப்பி. இன்று (ஆக.9) இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.

Story first published: Monday, August 9, 2021, 21:13 [IST]
Other articles published on Aug 9, 2021
English summary
Christian smashes five sixes Shakib over - டேன் கிறிஸ்டியன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X