For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயமில்லாம விளையாடுறாங்க... பந்த், பாண்டியா இதுக்கு சிறப்பான உதாரணம்... கங்குலி பாராட்டு

மும்பை : இந்திய அணியின் வீரர்கள் சமீப வருடங்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களது ஆட்டங்களில் தன்னம்பிக்கை சிறப்பாக வெளிப்பட்டு வருகிறது.

பயிற்சியெல்லாம் சிறப்பா துவக்க போறாரு... ஆனாலும் ஐபிஎல்லுல பங்கேக்கறது பத்தி யோசிக்கலையாம்! பயிற்சியெல்லாம் சிறப்பா துவக்க போறாரு... ஆனாலும் ஐபிஎல்லுல பங்கேக்கறது பத்தி யோசிக்கலையாம்!

நவீன கிரிக்கெட் வீரர்களிடம் பயமின்மை சிறப்பாக வெளிப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சிறப்பு

இந்திய அணி சிறப்பு

சமீப காலங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சிறப்பான திறமைகளை காண முடிகிறது. ஒருவரை மட்டுமே அணியில் நம்பி இல்லாமல், அணியின் 10 வீரர்களும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். சிறப்பான பேட்ஸ்மேன்களையும் பௌலர்களையும் ஆல்-ரவுண்டர்களையும் அதிகமாக கொண்டுள்ளது இந்திய அணி.

தன்னம்பிக்கை அதிகரிப்பு

தன்னம்பிக்கை அதிகரிப்பு

ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடுவதன்மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அவர்களது போட்டிகளில் அதிகமாக வெளிப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இது மட்டுமின்றி நவீன கிரிக்கெட் வீரர்களிடம் பயமின்மை சிறப்பாக வெளிப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெளிப்படும் பயமின்மை

வெளிப்படும் பயமின்மை

நிகிழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சர்வதேச அளவில் அவர்கள் விளையாடும்போது இது சிறப்பாக வெளிப்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலைகள், வசதிகள் உள்ளிட்டவை தற்போதைய தலைமுறை வீரர்கள் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா மற்றும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் சுத்தமாக பயமற்றவர்களாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

7 மணி பதற்றம்

7 மணி பதற்றம்

அவர்கள் தங்களது திறமைகளை மட்டுமே கொண்டு போட்டிகளுக்கு தயாராவதில்லை என்றும் மாறாக மனதளவிலும் அவர்கள் சிறப்பாகவே தங்களை தயார் படுத்திக் கொள்வதாகவும் கங்குலி பாராட்டியுள்ளார். தங்கள் காலங்களில் டெஸ்ட் போட்டிகளின்போது 7 மணி ஆனால் பதற்றம் தானாகவே பந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பாக விளையாட முடியும்

சிறப்பாக விளையாட முடியும்

தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் பதற்றத்தை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பதற்றம் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் போட்டிக்கு முன்னதாக அதை ஏற்றுக் கொண்டு அதை பாசிட்டிவ்வாக பயன்படுத்த வேண்டும் என்றும் கங்குலி மேலும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 13, 2021, 20:51 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
Accept nervousness before a game and utilise it positively to help you increase your performance -Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X