For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் போட்டியில் 'வீடு கட்டிய' சிவில் இன்ஜினியர்.. பவுலிங்கில் தெறிக்கவிட்ட வேகப்பந்து புயல்!

விதர்பாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ரஞ்சி கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

By Shyamsundar

டெல்லி: விதர்பாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ரஞ்சி கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ரஜ்னீஷ் குர்பானி என்னும் இவர் ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை போட்டிகளில் இவரை போல வேகமாக பந்து வீசும் வீரர் இதுவரை விளையாடியாதே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கும் விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த ஒரு ரஞ்சி கோப்பை போட்டியில் மட்டும் இவர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒல்லியான வேகப்புயல்

ஒல்லியான வேகப்புயல்

ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார் ரஜ்னீஷ் குர்பானி. வேகப்பந்து வீச்சாளரான இவர் எந்த கோணத்தில் பார்த்தாலும் வேகப்பந்து வீச்சாளர் போல இருக்க மாட்டார். ஆனால் இந்த ரஞ்சி தொடரில் மட்டும் இவர் 37 விக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார். இந்த 24 வயது நிரம்பிய இளம் புயல் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேகம் எவ்வளவு

பொதுவாக ரஞ்சி கோப்பை போட்டியில் வீரர்கள் 130 கிமீ வேகம் வரை வீசுவது கூட கடினமான விஷயம் ஆகும். அணிக்கு தேர்வான பின் சிறப்பு பயிற்சிகள் பெற்று வேகத்தை வீரர்கள் அதிகப்படுத்துவது வழக்கம். ஆனால் இவர் ரஞ்சி கோப்பையிலேயே 145 கிமீ வரை வீசி இருக்கிறார். அரையிறுதி போட்டி ஒன்றில் இவரது வேகம் 148 வரை சென்று இருக்கிறது.

மிரட்டினார்

இவர் அரையிறுதி போட்டியில் தொடந்து இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுற்கும் அதிகமா எடுத்து இருக்கிறார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் வெறும் 162 ரன்கள் கொடுத்து 12 விக்கெட் எடுத்த புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் காரணமாக கடந்த 60 வருடத்தில் முதல் முறையாக விதர்பா அணி ரஞ்சியில் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்று இருக்கிறது.

ஹாட் டிரிக் எடுத்தார்

இறுதி போட்டி தற்போது டெல்லிக்கும் விதர்பாவிற்கும் இடையில் நடந்து கொண்டு இருக்கிறது. இதிலும் அவர் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் எடுத்தார். மேலும் இதில் ஒரு ஹாட் டிரிக் விக்கெட்டும் அடக்கம். அதேபோல் தொடர்ச்சியாக மூன்று ஐந்து விக்கெட்டுகள் எடுத்த வீரரும் இவர்தான். இவர் விரைவில் இந்திய அணிக்கு தகுதி பெறுவார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Story first published: Monday, January 1, 2018, 15:34 [IST]
Other articles published on Jan 1, 2018
English summary
A Civil engineer graduate named Rajneesh Gurbani makes attention in Ranji trophy. He took hat trick wicket against Delhi in Ranji final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X