For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாகூர் லையன்சுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரிட்சை! அனல் பறக்கப்போகும் பெங்களூர் ஸ்டேடியம்

By Veera Kumar

பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில், பெங்களூரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதலாவது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. இருப்பினும் வீறு கொண்டு எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க உள்ளூர் அணியான டால்பினுக்கு எதிராக 242 ரன்கள் எடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று, நாங்க சின்னத்தில், ஆக்ஷனிலும் சிங்கம்தான் என்று நிரூபித்தனர் சென்னை அணியினர்.

கட்டாயத்தில் லாகூர் அணி

கட்டாயத்தில் லாகூர் அணி

இந்நிலையில், பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் லாகூர் லையன்ஸ் அணியை சென்னை எதிர்கொள்கிறது. லாகூர் அணி இதற்கு முன்பு (கொல்கத்தாவுக்கு எதிராக) விளையாடிய ஒரே லீக் போட்டியிலும் தோல்வி கண்டுள்ளது. அந்த அணிக்கு இது இரண்டாவது போட்டியாகும். எனவே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

சோபிப்பாரா ஸ்மித்

சோபிப்பாரா ஸ்மித்

கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய சென்னை தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித், கடந்த இரு போட்டிகளில் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை. அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் சென்னையின் பேட்டிங் பலம் மேலும் அதிகரிக்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரென்டன் மெக்கல்லம் கடந்த போட்டியில் 29 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

ரெய்னா அபாரம்

ரெய்னா அபாரம்

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அவர் இந்த ஆட்டத்தில் லாகூர் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என நம்பலாம். இதுதவிர டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

சென்னை பந்து வீச்சு மோசம்

சென்னை பந்து வீச்சு மோசம்

அதேநேரத்தில் சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பிராவோ மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோரின் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தால்தான் சூப்பர் கிங்ஸின் வெற்றி வசப்படும்.

அணிகள் விவரம்

அணிகள் விவரம்

சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.டோணி (கேப்டன்), டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மோஹித் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, பவன் நெகி, ஜான் ஹேஸ்டிங்ஸ், சாமுவேல் பத்ரி, மிதுன் மன்ஹாஸ்.

லாகூர் லயன்ஸ்: முகமது ஹபீஸ் (கேப்டன்), உமர் சித்திக், அஹமது ஷெஸாத், நசிர் ஜம்ஷெட், சாட் நஸிம், உமர் அக்மல், வஹாப் ரியாஸ், ஆசிஃப் ராஸா, முஸ்தபா இக்பால், அட்னன் ரசூல், அயாஸ் சீமா, முகமது சயீத், அலி மன்சூர், சல்மான், இம்ரான் அலி.

Story first published: Thursday, September 25, 2014, 17:26 [IST]
Other articles published on Sep 25, 2014
English summary
Riding high on a comfortable win over Dolphins in their last encounter, Chennai Super Kings will look to keep the momentum going when they lock horns with Lahore Lions in the Champions League T20 on today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X