For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகளிர் அணி கேப்டன்கள் சண்டையை நாங்க தீர்த்து வைக்கிறோம்.. பஞ்சாயத்தை கூட்டிய பிசிசிஐ

Recommended Video

இந்திய மகளிர் அணியின் அரையிறுதி தோல்வி, கேப்டன் சொல்வது என்ன?- வீடியோ

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜை உலகக்கோப்பை டி20 அரையிறுதி ஆட்டத்தில் களம் இறக்காத விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

இந்த விஷயத்தில் தற்போது பிசிசிஐ-யின் நிர்வாக கமிட்டி தலையிட்டுள்ளது. முதல் கட்டமாக அணி நிர்வாகம் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்திய அணி முக்கியமான மகளிர் உலக டி20 அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது.

வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்

வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்

அரையிறுதி ஆட்டத்தில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. முதல் நான்கு குரூப் சுற்று ஆட்டங்களில் மிதாலி ராஜ் மூன்று போட்டிகளில் பங்கேற்றார். அதில் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். எனினும், மிதாலி டி20 போட்டியில் நிதான ஆட்டம் ஆடுகிறார் என்ற ஒரு புகார் மட்டுமே இருந்தது. எனினும், அது அணியின் வெற்றியை மூன்று போட்டிகளில் பாதிக்கவில்லை.

அரையிறுதியில் மிதாலி இல்லை

அரையிறுதியில் மிதாலி இல்லை

நான்காவது டி20 யில் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார் மிதாலி. அடுத்து அரையிறுதி போட்டிக்கு மிதாலி தயாராக இருந்த நிலையில், களம் இறங்கும் அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், இந்தியா அந்த நாக் அவுட் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை வாய்ப்பை இழந்தது.

அணியின் நன்மைக்காக..

அணியின் நன்மைக்காக..

ரசிகர்கள் மிதாலி ராஜ் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என கேட்டு வந்த நிலையில், இது பற்றி பேசிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், "அணியின் நன்மைக்காகவே மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. நான்காவது போட்டியில் மிதாலி இல்லாமல் வெற்றி பெற்றோம். அதே அணியோடு அரையிறுதியில் களம் இறங்க முடிவு செய்தோம். அவரை நீக்கியதில் எந்த வருத்தமும் இல்லை" என கூறி இருந்தார்.

நீண்ட கால உரசல்

நீண்ட கால உரசல்

மிதாலி ராஜ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் ஆவார். ஹர்மன்ப்ரீத் டி20 அணியின் கேப்டன். இவர்களுக்குள் உரசல் இருப்பதாக நீண்ட காலமாகவே பேச்சு உண்டு. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இப்படி உலகக்கோப்பை அரையிறுதியில் ஹர்மன்ப்ரீத் நடந்து கொண்டாரா? என்பதே பலரின் கேள்வி.

கேப்டனுக்கு கிடைத்த திட்டு

கேப்டனுக்கு கிடைத்த திட்டு

இதன் பின், மிதாலி ராஜின் விளம்பர ஏஜென்ட் அலல்து மேனேஜர் என கூறப்படும் அனீஷ் குப்தா என்ற பெண் இணையத்தில் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரை சகட்டுமேனிக்கு திட்டி இருந்தார். சூழ்ச்சி செய்பவர், பொய்யர் என கடுமையான வார்த்தைகளால் கேப்டனை வறுத்து எடுத்தார்.

சகட்டுமேனிக்கு கேப்டனை திட்டிய மிதாலி ராஜ் மேனேஜர்.. மகளிர் கிரிக்கெட்டில் என்ன பிரச்சனை?

பிசிசிஐ-யின் விசாரணை

பிசிசிஐ-யின் விசாரணை

இந்த நிகழ்வுகளை கண்டு அதிர்ந்த பிசிசிஐ நிர்வாக கமிட்டி, தற்போது ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், பயிற்சியாளர் ரமேஷ் போவார், அணியின் மேனேஜர், மற்றும் தேர்வாளர் ஆகியோரை விசாரணைக்கு அளித்துள்ளது இந்த கமிட்டி. அறையிருதி போட்டிக்கு முன் என்ன நடந்தது என விசாரித்து ஒரு முடிவுக்கு வர உள்ளது பிசிசிஐ.

கவலைக்குரிய சம்பவம்

கவலைக்குரிய சம்பவம்

மேலும், வீரர்களோடு தொடர்புடையவர்கள் ஊடகத்தில் மோசமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். அது போன்ற நிகழ்வுகள் மிகவும் கவலைக்குரியது என நிர்வாக கமிட்டி கருதுவதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

Story first published: Monday, November 26, 2018, 13:11 [IST]
Other articles published on Nov 26, 2018
English summary
COA to meet Mithali Raj and Harmanpreet Kaur to find what happened in WWT20 semi final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X