For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உயிர் நாடியில் அடி.. கதிகலங்கிப்போன ஸ்டீவ் ஸ்மித்.. சிறப்பாக ஆடியவருக்கு அடுத்த பந்தே "ட்விஸ்ட்"

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் படக் கூடாத இடத்தில் அடி வாங்கி நொந்து போய்விட்டார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.28) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் . அணிகள் விளையாடி வருகின்றன

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்ய, பலம் வாய்ந்த டெல்லி அணி, கொல்கத்தா பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.

 அடிதூள்! சென்னை டாப் கியரில் வெற்றி.. மீண்டும் நம்பர்.1 - சிக்கலில் ஆர்சிபி அடிதூள்! சென்னை டாப் கியரில் வெற்றி.. மீண்டும் நம்பர்.1 - சிக்கலில் ஆர்சிபி

 இரண்டு விக்கெட்

இரண்டு விக்கெட்

இப்போட்டியில், டெல்லி அணி சிறப்பாக தொடக்கத்தை ஏற்படுத்தினாலும், 2 விக்கெட்டுகளுக்கு பிறகு ரன் ரேட் குறைந்துவிட்டது. ஷிகர் தவான் 20 ரன்களில் 24 ரன்கள் எடுத்து கேட்ச்சாக, ஷ்ரேயாஸ் ஐயர் ஜஸ்ட் 1 ரன்னில் சுனில் நரைன் ஓவரில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் 11 ஓவர்களுக்கு உள்ளாகவே 3 ஓவர்களை வீசிவிட்டார். ஆனால், விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. எனினும், தமிழ் பேசும் வெங்கடேஷ் ஐயர் ஓவரில், அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மயர் 4 ரன்களில் கேட்ச்சானார். அதேபோல், அக்ஷர் படேலும் வெங்கடேஷ் ஓவரில் கேட்ச்சானார். இதுவரை இந்த சீசனில், ஒரு பேட்ஸ்மேனாக எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வெங்கடேஷ் ஐயர், இன்று பவுலிங்கிலும் அசத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

 சுருண்டு விழுந்த ஸ்மித்

சுருண்டு விழுந்த ஸ்மித்

கொல்கத்தா அணி 15 ஓவர்களுக்குள்ளாகவே டெல்லி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு அந்த அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. அதே சமயம், வருண் வீசிய கடைசி ஓவரில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இதற்கிடையே, டெல்லி அணியில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித், லோகி ஃபெர்கியூசன் வீசிய 12.1வது ஓவரில், ஸ்கூப் ஷாட் விளையாட முயற்சி செய்தார். அதாவது, எந்தவித திட்டமிடலும் இன்றி, கடைசி நேரத்தில் முடிவு செய்து, விளையாடியது போல் இருந்தது அந்த ஷாட். ஆனால், மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வந்த அந்த பந்து, நேராக படக் கூடாத இடத்தில் பட, அங்கேயே சுருண்டு விழுந்தார் ஸ்மித்.

 உடனே அவுட்

உடனே அவுட்

கிட்டத்தட்ட 10 நொடிகள் வரை கிரீஸிலேயே படுத்துக் கிடந்த ஸ்மித், நன்றாக மூச்சை இழுத்துவிட்டு அதன் பிறகே அவர் எழுந்தார். ஆனால், அடுத்த பந்தில் ரொம்பவர் டயர்டான டோனில் ஒரு ஷாட் அடிக்க முயல, லெக் ஸ்டெம்ப்பை பறிகொடுத்து வெளியேறினார் ஸ்மித். அவர் உண்மையில் அயற்சியின் காரணமாக அடிக்க முடியாமல் வெளியேறினாரா அல்லது முந்தைய பந்து ஏற்படுத்திய ரணம் காரணமாக உடனே அவுட்டாகி வெளியேறினாரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

 தப்பிக்குமா கொல்கத்தா?

தப்பிக்குமா கொல்கத்தா?

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற, இந்த போட்டியின் வெற்றி மிக மிக முக்கியமானதாகும். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. +0.322 எனும் நல்ல ரன் ரேட் அந்த அணி வைத்துள்ளது. அதேசமயம் டெல்லி அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. பிளே ஆஃப் முன்னேற, அனைத்து போட்டிகளிலும் அந்த அணி வென்றாக வேண்டும்.

Story first published: Tuesday, September 28, 2021, 22:51 [IST]
Other articles published on Sep 28, 2021
English summary
Smith tried scoop and hit from Ferguson kkr vs dd - ஸ்மித்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X