தனியாக தொங்கிய அந்த கோட்.. அழுகையை கட்டுப்படுத்திய வீரர்கள்.. நேற்று நடந்த உறைய வைக்கும் சம்பவம்!

துபாய்: நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூருக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் நடந்த உருக்கமான சம்பவம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பெங்களூருக்கும், பஞ்சாப்பிற்கும் இடையில் ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியில் முதலில் இறங்கிய பஞ்சாப் அணி பெங்களூரின் பவுலிங்கை விளாசி தள்ளியது.

முக்கியமாக பஞ்சாப் கேப்டன் ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவருக்குள் வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ்

இந்த போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் வர்ணனை செய்வதாக இருந்தது. அவர்தான் மும்பையில் இருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்காக வர்ணனை செய்வதாக இருந்தது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் டீன் ஜோன்ஸ் நேற்று மும்பையில் காலமானார்.

வர்ணனை

வர்ணனை

ஐபிஎல் வர்ணனைக்காக மும்பையில் தங்கி இருந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், சக வர்ணனையாளர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவப்பு டைரி

சிவப்பு டைரி

இந்த நிலையில் நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் டீன் ஜோன்ஸுக்கு சிறப்பு மரியாதை செய்தது. அதன்படி நேற்று வர்ணனையாளர் அரங்கில், டீன் ஜோன்ஸ் அமரும் இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கையில் டீன் ஜோன்ஸ் அணியும் கோட் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது.

மரியாதை

மரியாதை

அதோடு, அவர் பயன்படுத்தும் பிரபல டைரியும் அங்கே வைக்கப்பட்டு இருந்தது. சிவப்பு நிற டைரி வைக்கப்பட்டு இருந்தது. அவரை நினைவு கூறும் வகையில் இப்படி செய்யப்பட்டது. அருகில் இருந்த இருக்கையில் பிரிட் லீ அமர்ந்து இருந்தார். அவரின் மறைவை நம்பவே முடியவில்லை. இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறந்த மனிதர்

சிறந்த மனிதர்

அவர் மிக சிறந்த மனிதர். அவருக்கா இப்படி நடக்க வேண்டும். என்னுடன் இன்று அவர் அருகில் அமர்ந்து பேச வேண்டும். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை என்று கண்ணீர் மல்க பிரிட் லீ பேசினார். பிரிட் லீ அந்த நிகழ்ச்சியில் தனக்கு வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டார். முன்னாள் வீரர்கள் பலர் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Commentry box gives salute to late Australian player Dean Jones yesterday .
Story first published: Friday, September 25, 2020, 13:13 [IST]
Other articles published on Sep 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X