For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

34 ரன்களுக்கு 8 விக்கெட் போச்சு.. வரலாற்று தங்கத்தை மிஸ் செய்த இந்திய மகளிர் அணி

எட்ஜ்பாஸ்டன் : காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

Recommended Video

CWG 2022: India-வுக்கு மீண்டும் Heartbreak! Gold வென்ற Australia | Aanee's Appeal

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி தேர்வு செய்தது.

கொரோனா பாதிக்கப்பட்ட வீராங்கனை தஹிலா மெக்ராத், இந்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி தொடக்க வீராங்கனை செஃபாலி வர்மா 11 ரன்களில் ஆட்டம் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா 6 ரன்களில் வெளியேறினார்.

கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி.. காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை- முழு விவரம் கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி.. காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் சர்ச்சை- முழு விவரம்

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஹேலி 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லெனிங்,மூனி ஜோடி அபாரமாக விளையாடி 74 ரன்கள் சேர்த்தது.இதில் லெனிங் 26 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.41 பந்துகள் எதிர்கொண்ட மூனி 61 ரகளை சேர்த்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

162 ரன்கள் இலக்கு

162 ரன்கள் இலக்கு

தஹிலா மெக்ராத் 2 ரன்களில் வெளியேற இறுதியில் கார்னர் 25 இடங்கள் இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டு இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி தொடக்க வீராங்கனை செஃபாலி வர்மா 11 ரன்களில் ஆட்டம் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தானா 6 ரன்களில் வெளியேறினார்.

ஹர்மன்பிரித் அதிரடி

ஹர்மன்பிரித் அதிரடி

இதனை அடுத்து மூன்றாவது கிரிக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிகியூஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ரோட்ரிகியூஸ் ஆட்டமிழக்க, தனி ஆளாக நின்று போராடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 43 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

சரிந்த வெற்றி

சரிந்த வெற்றி

இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்துவீசி இந்திய விக்கட்டுகளை வீழ்த்தினர். 118 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ,அடுத்த 34 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

கிரிக்கெட்டில் முதல் வெள்ளி

கிரிக்கெட்டில் முதல் வெள்ளி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீராங்கனைகள் முதல் 3 பந்துகளில் ஆல் அவுட் ஆகினர். இதன் மூலம் இந்திய அணிக்கு வரலாற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. எனினும் ஆறுதலாக காமன்வெலத்தில் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வெள்ளி பதக்கத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

Story first published: Tuesday, August 9, 2022, 19:00 [IST]
Other articles published on Aug 9, 2022
English summary
commonwealth games - indian womens cricket team misses historic gold 34 ரன்களுக்கு 8 விக்கெட் போச்சு.. வரலாற்று தங்கத்தை மிஸ் செய்த இந்திய மகளிர் அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X