சாதனைகளுக்காக காத்திருக்கும் நரேந்திர மோடி மைதானம்... வீரர்களும்தாங்க!

அகமதாபாத் : கடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் காரணமாக சோதனைகளுக்கு உட்பட்டது நரேந்திர மோடி மைதானம்.

இந்நிலையில் நாளை அதே மைதானத்தில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

அந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் காத்திருக்கின்றனர். மைதானமும்தான்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. நாளை 4வது மற்றும் இறுதிப்போட்டி துவங்கவுள்ளது. இதற்கென இரு அணிகளும் மும்முரமாக தயாராகியுள்ளன. கடந்த போட்டியில் பிட்ச் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாதனைகளுக்கு காத்திருப்பு

சாதனைகளுக்கு காத்திருப்பு

இந்நிலையில் நாளைய போட்டியிலும் அதே பிட்ச்தான் இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாளைய போட்டியை சிறப்பாக எதிர்கொள்ள இரு அணிகளும் தயாராக உள்ளன. இந்த போட்டியில் சாதனைகளுக்கும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்

முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிராக முன்னாள் கேப்டன் கபில்தேவின் 27 டெஸ்ட்களில் 85 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க ஸ்பின்னர் ரவி அஸ்வினுக்கு இன்னும் 6 விக்கெட்டுகளே மீதமுள்ளன. அவர் இதுவரை அந்த அணிக்கு எதிராக 18 போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

100 விக்கெட்டுகள் சாதனை

100 விக்கெட்டுகள் சாதனை

இதே போல டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்களில் மட்டும் 100 விக்கெட்டுகள் சாதனையை மேற்கொள்ள அஸ்வினுக்கு 1 விக்கெட் மட்டுமே மீதமுள்ளது. இதேபோல முன்னாள் வீரர் க்ளென் மெக்கிராத்தின் 29 ஐந்து விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க இன்னும் ஒரு 5 விக்கெட்டுகள் சாதனையை அவர் மேற்கொள்ள வேண்டும். தற்போது இருவரும் சமநிலையில் உள்ளனர்.

அடுத்த சாதனைக்கு காத்திருப்பு

அடுத்த சாதனைக்கு காத்திருப்பு

மேலும் இதுவரை அஸ்வின் 7 பத்து விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் முன்னாள் வீரர் லில்லீயின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் ஒரு 10 விக்கெட் சாதனை தேவைப்படுகிறது. அதை அவர் அடுத்த போட்டியில் நிகழ்த்தும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் கும்ப்ளேவின் சாதனையையும் நேர்படுத்திக் கொள்ள முடியும்.

கோலிக்கு தேவைப்படும் 25 ரன்கள்

கோலிக்கு தேவைப்படும் 25 ரன்கள்

இதேபோல முன்னாள் வீரர் கிளைவ் லாய்டின் அதிக ரன்கள், அதாவது 7515 ரன்கள் சாதனையை முறியடிக்க கேப்டன் விராட் கோலிக்கு இன்னும் 25 ரன்களே தேவைப்படுகிறது. கோலி இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் டெய்லரின் 7525 ரன்கள், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப்பின் 7530 ரன்கள் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் 7540 ரன்கள் சாதனைகளை முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

4000 ரன்கள் சாதனை

4000 ரன்கள் சாதனை

புஜாராவிற்கு விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் 4000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 72 ரன்களே தேவைப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் 8586 ரன்கள் சாதனையை முறியடிக்க 5 ரன்களே தேவைப்படுகிறது. ஜோ ரூட் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8582 ரன்களை குவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli needs 25 runs to surpass Clive Lloyd on the highest run-getters list in Test cricket
Story first published: Wednesday, March 3, 2021, 20:51 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X