For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் உலகை உலுக்கிய சூதாட்டம்.. ஸ்டிங் ஆபரேசனில் புக்கிகள் பேசியது என்ன? முழு விவரம் இதோ

By Veera Kumar

கான்பெரா: உலக கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போடும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நடுவேயான ஆஷஸ் டெட்ஸ் தொடரில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக வெளியான பத்திரிகை செய்தி தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உரையாடலில் பங்கேற்ற 2 இந்திய புக்கிகள் பெயர்கள் சோபர்ஸ் ஜோபன் மற்றும் பிரியங் சக்சேனா என தெரியவந்துள்ளது. இந்த இந்திய புக்கிகளுக்குதான் முக்கிய தொடர்புள்ளதாக 'தி சன்' ஆங்கில டேப்ளாய்ட் வெளியிட்டுள்ள செய்தி கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ளது.

Complete transcript from The Sun’s investigation into Ashes match-fixing

ஆங்கில பத்திரிகை நிருபர்குழு, புக்கிகளுடன் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ் வென்றதும், பேட்டிங்கா, பந்து வீச்சா என்பதை தேர்ந்தெடுப்பதில் இருந்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வளவு ரன் சேகரிக்க வேண்டும், ஒரு ஓவரில் எவ்வளவு ரன் எடுக்க வேண்டும், எப்போது அவுட்டாக வேண்டும் என்பது குறித்தெல்லாம் பிக்சிங் செய்யப்படுவதாக இந்த விசாரணையில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

Complete transcript from The Sun’s investigation into Ashes match-fixing

இதுகுறித்து புக்கிகளுக்கும், நிருபர்களுக்கும் (நிருபர்கள் என வெளிக்காட்டிக்கொள்ளாமல்) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முழு தகவல் இதோ:

சோபர்ஸ் ஜோபன்: பிரியங்க் கூறியதை போல உங்களுக்கு விருப்பம் இருப்பதால் ஆஸ்திரேலியாவின் 'சைலன்ட் மேனிடம்' பேசுவார். அவர் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். நீங்களும் தேவைப்பட்டால் அவருடன் செல்லலாம். ஆனால் சைலன்ட் மேனுடனான சந்திப்பின்போது, நீங்கள் உடன் இருக்க முடியாது. ஸ்கிரிப்ட் தருவாரா, செஷனுக்கு எவ்வளவு ரன் அடிக்க போகிறார்கள் என்பது குறித்த தகவலை அவர் தருவாரா என்பது இப்போது தெரியாது. எவ்வளவு பணம் தேவை என்பது அப்போதுதான் தெரிய வரும்.

நிருபர்: அவர் என்ன சொல்கிறாரோ, அது கண்டிப்பாக நடக்குமா?

பிரியங்க் சச்சேனா: 1000 பெர்சன்ட்.

சோபர்ஸ் ஜோபன்: நான் பெர்த் டெஸ்ட்டில் உங்களுக்கு வேலை தருகிறேன்.

நிருபர்: அப்படியானால், 3வது டெஸ்டில் நமக்கு ஏதாவது கிடைக்குமா?

சோபர்ஸ் ஜோபன்: ஆஷஷ் செஷன்களில் கிடைக்கும்.

நிருபர்: பெர்த்தில் நடக்கும் 3வது டெஸ்டிலா?

சோபர்ஸ் ஜோபன்: ஆம், 3வது டெஸ்ட்- செஷன்.

நிருபர்: எப்போது என்று உங்களுக்கு தெரியுமா, முதல் நாளிலேயே நடக்குமா?

சோபர்ஸ் ஜோபன்: முதல் நாளில் அல்லது 2வது நாளில் இருக்கலாம். ஒரு செஷனுக்கான ரன் அடிப்படையில் ரூ.60 லட்சம் பெட் கட்டலாம்.

நிருபர்: ரூ.60 லட்சம் ஓகே.

சோபர்ஸ் ஜோபன்: 60 லட்சம் முதல் நாள், 2வது நாள், 3வது நாள்களில் இருக்கலாம். நமக்கு இரு செஷன்களில் வேலையுள்ளது. ஒரு செஷனுக்கு ரூ.60 லட்சம்.

நிருபர்: ரைட், ஓகே.

சோபர்ஸ் ஜோபன்: இந்த தகவல்கள் உண்மைதானா?

சோபர்ஸ் ஜோபன்: கண்டிப்பாக சரியான விவரம்தான். மற்றொரு குரூப் மும்பையிலிருந்து வேலை பார்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவில் நீங்கள் அட்வான்சாக பணம் தர வேண்டும். சரியான தொகையை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

நிருபர்: வியாழக்கிழமை ஆஷஷில் டாஸ் போட்ட பிறகே நமது வேலை என்ன என்பபது தெரியவரும்.

சோபர்ஸ் ஜோபன்: கண்டிப்பாக, டாஸ் போட்ட பிறகு தெரிய வரும்.

நிருபர்: எப்போது செஷன்..

சோபர்ஸ் ஜோபன்: ஆம், ஆம். அதே நாளில் அல்லது இரண்டாவது நாளில்.

சோபர்ஸ் ஜோபன்: பிக்பாஷ் (ஆஸி.யில் நடக்கும் டி20 தொடர்) தொடரில் மாஜிக் நிகழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பிக்பாஷிலும் நாம் செய்ய முடியும். வெற்றி அல்து தோல்வி பற்றி பந்தையம் கட்டலாம்.
இவ்வாறு கூறிய சோபர்ஸ் ஜோபன் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஒருவர் அதற்கு உடந்தை என கூறுகிறார். ஆனால் சட்ட பிரச்சினைகளுக்காக அந்த பெயரை 'தி சன்' வெளியிடவில்லை.

சோபர்ஸ் ஜோபன்: ஸ்க்ரிப்ட் என்றால் என்ன என கூறுகிறேன். 6 ஓவர்கள் 32 ரன்கள், 10 ஓவர்கள் 60 ரன்கள், 15 ஓவர்கள், 70 அல்லது 80 இப்படி ஸ்க்ரிப்ட் தருவேன். இதன்படி போட்டி நடப்பதுதான் ஸ்க்ரிப்ட்.

நிருபர்: சிங்கிள் ரன் கூட மாறாமல் எப்படி துல்லியமாக இருக்கும்.

சோபர்ஸ் ஜோபன்: கண்டிப்பாக. 52 என்றால் 51 ரன் அல்லது 53 கூட வரலாம். நாட்அவுட், சேஸிங் ரன் விகிதம் போன்ற அனைத்தையும் தீர்மானிக்க முடியும். விக்கெட் வீழ்ச்சியையும் கூட.

நிருபர்: ஸ்கிரிப்டில் இதை தெளிவாக கூறுவீர்களா?

சோபர்ஸ் ஜோபன்: உங்களுக்கு எந்த சாய்ஸ் வேண்டுமோ அதை எழுதி தருவோம். விளையாட்டு வீரர்கள் யார் நமக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்கள் நமக்கு சில சிக்னல்களை தருவார்கள். ஐபிஎல் தொடரில் 5 டி சட்டைகள் ஹாப்-ஸ்லீவாகவும், பிற ஃபுல் ஸ்லீவாகவும் தரப்படும். பந்து போடும்போது, ஃபுல் ஸ்லீவ் அணிந்துள்ளார்களா இல்லையா எனஅபது நமக்கு சிக்னல். அதேதபோல வைடு போடுவது, ஓடி வந்துவிட்டு பந்தை வீசாமல் நிற்பது போன்றவை அந்த ஓவர்களுக்கான சிக்னல்கள். அதை அடிப்படையாக வைத்து நாம் பெட் கட்ட வேண்டும். 3 நிமிடங்கள் நீங்கள் போனில் பேச வேண்டிவரும், எஸ், நோ போன்ற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி, பெட் கட்டலாம்.

சோபர்ஸ் ஜோபன்: எனக்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பலருடன் தொடர்புள்ளது. அவர்கள் யாருடனும் நீங்கள் பேசப்போவதில்லை. ஐபிஎல் மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஐபிஎல்லில் முதலீடு செய்ய நினைத்தால், வீரர்கள் தங்களுக்கென தனி ஏஜென்டுகள் மற்றும் புக்கிகளை வைத்துள்ளார்கள். இந்த ஐபிஎல் மொத்த உலகிற்கும் பிக்சிங் பற்றி சொல்லப்போகிறது.

நிருபர்: பிக்சிங் பற்றியா?

சோபர்ஸ் ஜோபன்: பணத்தை பற்றி. இவ்வாறு அந்த உரையால் நிறைவடைகிறது.

Story first published: Thursday, December 14, 2017, 13:49 [IST]
Other articles published on Dec 14, 2017
English summary
Complete transcript from The Sun’s investigation into Ashes match-fixing on the morning of the third Ashes Test in Perth, Australian cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X