For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனியை உட்கார வைக்க கோலி சொன்னாரா…? வெடித்தது சர்ச்சை

ராஞ்சி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் தல தோனி நீக்கத்துக்கு கேப்டன் கோலியின் பரிந்துரை காரணமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இது தல தோனியின் சொந்த ஊர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் போராடி தோற்றது. 313 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கோலி தனி ஒருவனாக போராடினார்.

 </a></strong><a class=நாங்க நல்லா விளையாண்டோம்... ஜெயிச்சோம்... இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச் " title=" நாங்க நல்லா விளையாண்டோம்... ஜெயிச்சோம்... இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச் " /> நாங்க நல்லா விளையாண்டோம்... ஜெயிச்சோம்... இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச்

281 ரன்களில் ஆல்அவுட்

281 ரன்களில் ஆல்அவுட்

சிறப்பாக ஆடிய கோலி 41 வது சதத்தை எட்டினார். ஆனாலும், இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

தோனியின் சொந்த ஊரில் இந்திய அணி தோல்வியை சந்திருப்பது... ரசிகர்களை வெகுவாக ஏமாற்றமடைய செய்தது. இருப்பினும் தோல்வி குறித்து பேசிய கோலி, அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

தொடர்ந்து அவர் பேசியதாவது: அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். தங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

உலக கோப்பை தொடர்

உலக கோப்பை தொடர்

விரைவில் உலககோப்பைத் தொடரை எதிர்கொள்ள இருக்கிறோம். எல்லாருடைய கவனமும் அந்த தொடரை நோக்கியே தான் இருக்கிறது. எனவே, அடுத்து வரக்கூடிய போட்டிகளில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும்.

மிடில் ஆர்டர் வரிசை

மிடில் ஆர்டர் வரிசை

அணியின் பேட்டிங் வரிசையில் குறிப்பாக... மிடில் ஆர்டரில் சில தேக்கங்கள் இருக்கிறது. அவற்றை சரி செய்வோம்... மீண்டும் வலுவாக வருவோம் என்று கூறினார்.

போதிய வீரர்கள் இல்லை

போதிய வீரர்கள் இல்லை

அவரின் இந்த பேட்டியானது சில விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதாவது: அணியில் நிலைத்து நின்று ஆடிய போதும்... தம்முடன் கை கோர்த்து விளையாட மிடில் ஆர்டரில் போதிய வீரர்கள் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்.

பொறுப்பாக ஆடவில்லை

பொறுப்பாக ஆடவில்லை

இன்னும் சொல்ல போனால்... குறிப்பாக தோனி உள்ளிட்டவர்கள் பொறுப்புடன் ஆடவில்லை. அதை தான் மிடில் ஆர்டரில் சரியான பார்ட்னர்ஷிப் இல்லை என்பதை கோலி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறியிருக்கின்றனர்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

கோலியின் பேட்டியின் வழியாக, மாற்றங்கள் உண்டு என்பது உறுதியானது. அந்த நிலையில் தான் அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கரின் பேட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தோனிக்கு ரெஸ்ட்

தோனிக்கு ரெஸ்ட்

அவர் கூறியதாவது: அடுத்து வரக்கூடிய 2 போட்டிகளில் தோனிக்கு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் விளையாடுவார்.

பன்டுக்கு வாய்ப்பு

பன்டுக்கு வாய்ப்பு

உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக மட்டுமே பன்ட் சேர்க்கப்படுகிறார். இதேபோல் மேலும் சில மாற்றங்கள் இருக்கும்.

சமிக்கு காயம்

சமிக்கு காயம்

சமிக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாகவில்லை. அது நீடித்தால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார் என்றார். மாற்றம் வேண்டும்.. நடக்கும் என்று கோலி கூற... பேட்டிங் கோச் சஞ்சய் பங்கரின் அறிவிப்பின் வழியாக தோனியை உட்கார வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் குமுறுகிறார்கள்.

தோனிக்கு கடைசி போட்டி

தோனிக்கு கடைசி போட்டி

முன்னதாக.. பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அளித்த பேட்டி ஒன்று எல்லார் மனதிலும் வந்து போகிறது. அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்த போது... ராஞ்சி போட்டி தான் தோனிக்கு கடைசி போட்டி என்று கூறியது நினைவிருக்கலாம்.

Story first published: Saturday, March 9, 2019, 12:42 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Controversies starts over Dhoni's dismissal in the next two matches against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X