For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முஸ்தபா .. முஸ்தபா... சீனிக்கு முக்கியத்துவம்.. கோச்சுக்கிட்டுப் போன ஐசிசி தலைவர் கமால்!!

By Veera Kumar

மெல்போர்ன்: உலக கோப்பையை யார் வழங்குவது என்ற போட்டியில் ஐசிசி சேர்மன் சீனிவாசனிடம் தோற்ற, ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஸ்டேடியத்தை விட்டே வெளியேறிய தகவல் வெளியாகியுள்ளது.

1996 உலக கோப்பைவரை, வெற்றி பெற்ற அணிகளுக்கு யாராவது ஒரு விஐபிதான் கோப்பையை அளித்து வந்தார். ஆனால் அதன்பிறகு ஐசிசி தலைவர் கோப்பையை வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

சேர்மன் பதவி

சேர்மன் பதவி

இந்நிலையில், ஐசிசியில் தற்போது சேர்மன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரமிக்கவரான சீனிவாசன் அமரச் செய்யப்பட்டுள்ளார். இந்த சேர்மன் பதவில் உள்ளவர்களுக்குதான், ஐசிசியில் அதிக அதிகாரம் உண்டு.

வறுத்தெடுப்பு

வறுத்தெடுப்பு

இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற 11வது உலக கோப்பை கிரிக்கெட் பைனல் நேற்று நடைபெற்றதையொட்டி, ஐசிசி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, ஐசிசி தலைவரான முஸ்தபா கமாலை, ஐசிசி சேர்மன் சீனிவாசன் வறுத்தெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

கமால் அடாவடி குற்றச்சாட்டு

கமால் அடாவடி குற்றச்சாட்டு

காலிறுதி போட்டியில், இந்திய பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவுக்கு வங்கதேச பவுலர் ருபேல் வீசிய பந்து நோபால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே பந்தில் அவர் கேட்ச்சும் கொடுத்தார். எனவே இந்தியாவின் நெருக்கடியால் நடுவர் அப்படி அறிவித்துவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கமால்.

சீனிவாசன் கோபம்

சீனிவாசன் கோபம்

இந்த சம்பவத்திற்கு சீனிவாசன் வெளிப்படையாக எந்த கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்றபோதிலும், ஐசிசி கூட்டத்தில் இதுகுறித்து காரசாரமாக பேசியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், வெற்றி பெற்ற அணிக்கு, ஐசிசி சேர்மனே கோப்பையை, வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கமால் எஸ்கேப்

கமால் எஸ்கேப்

இந்நிலையில்தான், நேற்று மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டுக்கு, வராமல் கமால் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் தனக்கு கவுரவம் கிடைக்காது என்று தெரிந்து கமால் ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது. வங்கதேச மத்திய அமைச்சராகவும் பதவி வகிக்கும் கமாலின் ஐசிசி தலைவர் பதவிக் காலம் இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 30, 2015, 14:52 [IST]
Other articles published on Mar 30, 2015
English summary
Peeved at not being given the opportunity to hand out the World Cup trophy to the champions, International Cricket Council (ICC) President Mustafa Kamal today left the Melbourne Cricket Ground (MCG) even before the final between Australia and New Zealand finished.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X