For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஹாட்"டான ஆட்டம்.. "ஹாட்டஸ்ட்" ரசிகர்கள்.. ரகளையான கிளைமேக்ஸை நோக்கி கோப்பா அமெரிக்கா!

சாண்டியாகோ, சிலி: கோப்பா அமெரிக்கா, எனப்படும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கான கால்பந்து சாம்பியன் போட்டி கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிலியும், அர்ஜென்டினாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

நேற்று நடந்த விறுவிறுப்பான 2வது அரை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பராகுவேயை 6-1 என்ற கோல் கணக்கில் தூக்கிப் போட்டு உதைத்து அனுப்பி விட்டு இறுதிக்குள் வந்து சேர்ந்தது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் அர்ஜென்டினா வெல்லும் என பலரும், சிலியே வெல்லும் என மேலும் பலரும் கட்டியம் கூறி வருகின்றனர்.

சிலியில்

சிலியில்

கோபா அமெரிக்கா போட்டியும் கிட்டத்தட்ட உலககக் கோப்பைக்கு நிகரான போட்டிதான். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் இதில் மோதும்.

12 அணிகள்

12 அணிகள்

மொத்தம் 12 அணிகள் இதில் கலந்து கொண்டன. அதிலிருந்து தற்போது அர்ஜென்டினாவும், சிலியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. பிரேசில் போன்ற ஜாம்பவான்கள் வெளியேறி விட்டனர்.

இறுதிப் போட்டிக்கு விறுவிறுப்பான ஆயத்தம்

இறுதிப் போட்டிக்கு விறுவிறுப்பான ஆயத்தம்

சிலி தலைநகர் சாண்டியாகோவில் இறுதிப் போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வென்று தனது முதலாவது சர்வதேச பட்டத்தைப் பெற சிலி வெறியுடன் உள்ளது.

அர்ஜென்டினாவுக்கே வாய்ப்பு

அர்ஜென்டினாவுக்கே வாய்ப்பு

ஆனால் கோப்பை அர்ஜென்டினாவுக்கே கிடைக்கும் என பலரும் கணித்துள்ளனர். சிலியின் உள்ளூர் ரசிகர்களின் ஆவேச ஆதரவையும் தாண்டி அர்ஜென்டினா வெல்லலாம் என்பது பலரின் கணிப்பாகும்.

வழக்கம் போல கவர்ச்சி ரசிகர்கள்

வழக்கம் போல கவர்ச்சி ரசிகர்கள்

கால்பந்துப் போட்டி என்றாலே வன்முறையும், கவர்ச்சியும்தான் பிரதானமாக இருக்கும். இந்தப் போட்டியும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் இந்த முறை வன்முறை அதிகம் இல்லை. ஆனால் கவர்ச்சி அதிகம்தான்.

ரசிகைகளின் ரகளை கவர்ச்சி

ரசிகைகளின் ரகளை கவர்ச்சி

தத்தமது நாடுகளின் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல நாட்டு ரசிகைகள் கவர்ச்சி பொங்க சிலி நாட்டையே கலங்கடித்து வருகின்றனர்.

திறந்த மார்புகள்.. பெயிண்ட் அடித்த முதுகுகள்

திறந்த மார்புகள்.. பெயிண்ட் அடித்த முதுகுகள்

பல ரசிகைகள் தங்களது அணியின் பெயரை மார்பகங்களில் எழுதி அவற்றை வெளிப்படுத்தியபடி போட்டிகளுக்கு வந்திருந்தனர். பலரின் முதுகுகள் அணிகளின் பெயர்களையும், வீரர்களின் பெயர்களையும் தாங்கி நின்றன.

இப்படி ஜெயிப்பாங்களாம்

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெல்லும் என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

பார்க்கலாம் மெஸ்ஸி மேஜிக் செல்லுபடியாகுமா என்பதை!

Story first published: Thursday, July 2, 2015, 11:48 [IST]
Other articles published on Jul 2, 2015
English summary
Copa America 2015 tournament is nearing the final cilmax as favorite Argentina and host Chile are gettting ready for summit clash on Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X