For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. இலங்கையிடம் தோற்ற பிறகு.. எதிர்பார்க்காத "திருப்பம்"

கொழும்பு: க்ருனால் பாண்ட்யாவைத் தொடர்ந்து மேலும் 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் தொடரில் விளையாடியது.

இதில், 2-1 என்று ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 1-2 என்று டி20 தொடரை இழந்தது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடைசி 2 டி20 போட்டிகளிலும் தோற்று, கோப்பையை இழந்துள்ளது.

க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணிக்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி

 எப்படி ஏற்பட்டது?

எப்படி ஏற்பட்டது?

ஆனால், இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது கொரோனா தான். ஆம்! முதல் டி20 போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு, இந்திய வீரர் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடும் பயோ-பபுள் நெறிமுறைகளை மீறி அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளது. ஸ்டார் ஹோட்டலில் ரூம், பாதுகாப்பான கொரோனா நெறிமுறைகள், பயோ-பபுள் என இத்தனை அம்சங்களையும் மீறி கொரோனா எப்படி அவருக்கு ஏற்பட்டது என்பது புரியவில்லை.

 தீர்மானிக்கப்பட்ட தோல்வி

தீர்மானிக்கப்பட்ட தோல்வி

சரி.. அவருக்கு தானே கொரோனா.. அடுத்து ஆக்க வேண்டிய வேலையைப் பாருங்க என்று நாம் நினைத்தால், அங்கு தான் பிரச்சனையே. அவரிடம் நெருக்கமாக இருந்த எட்டு இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில், எட்டு வீரர்கள் என்று சொல்வதை விட, இந்திய அணியே போச்சு என்று கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆம்! க்ருனால் பாண்ட்யாவுடன் நெருக்கமாக இருந்ததாக கருதப்பட்ட ப்ரித்வி ஷா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், தீபக் சாகர், மணீஷ் பாண்டே, இஷான் கிஷன், கிருஷ்ணப்பா கவுதம் என்று ஒரு படையே தனிமைப்படுப்பட்டது. இதில், இந்திய அணியின் தோல்வி அப்போதே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

 வியக்க வைத்த இலங்கை வீரர்

வியக்க வைத்த இலங்கை வீரர்

வெறும் 5 பேட்ஸ்மேனால் வைத்து மீதமிருந்த 2 டி20 போட்டிகளிலும் விளையாடியது இந்திய அணி. 5 பேட்ஸ்மேன்கள் + 6 பவுலர்கள். அப்பறம் எப்படி ஜெயிக்க முடியும்? போதாதகுறைக்கு இலங்கையும் சிறப்பான ஸ்பின் பவுலிங் கொண்டு இந்தியாவை திணறடித்தது. இதனால் ராகுல் டிராவிட் பயிற்சி கொடுத்தும், ஷிகர் தவான் கேப்டன்சி செய்தும் இந்திய அணியால் ஜெயிக்க முடியவில்லை. இலங்கை அணியின் Wanindu Hasaranga எனும் 24 வயது இளைஞன் காட்டிய வேகம், துடிப்பு என்பது வியக்க வைத்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் தனது ஸ்பின் பவுலிங்கில் திணறடித்துவிட்டார். அவர் ஒரு ஆல் ரவுண்டரும் கூட.

 சாஹல், கவுதம்

சாஹல், கவுதம்

இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு மேலும் ஒரு பேரிடியாக க்ருனால் பாண்ட்யாவைத் தொடர்ந்து மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. க்ருனால் பாண்ட்யாவுடன் நெருக்கமாக இருந்த யுவேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய இருவருக்கும் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பிசிசிஐ சார்பில் ஏஎன்ஐ-யிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த பிசிசிஐ தரப்பில், "எதிர்பாராதவிதமாக சாஹல் மற்றும் கவுதம் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பாண்ட்யாவுடன் இருந்தவர்கள். எனினும், அவர்கள் இருவரும் ஏற்கனவே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மேற்கொண்டு நாம் அச்சப்பட வேண்டியதில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Ind vs SL T20 தொடர் தோல்வி Shikhar Dhawan வருத்தம் | Oneindia Tamil
 தகவல் இல்லை

தகவல் இல்லை

இந்திய அணி டி20 தொடரையும் இழக்க, மேற்கொண்டு இரண்டு வீரர்களுக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 3 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி மேலும் சில நாட்களுக்கு இலங்கையில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கோச் டிராவிட் தொடங்கி, வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் முன்பு திட்டமிட்டிருந்த ஷெட்யூல் போல் அல்லாமல், மேலும் சில நாட்கள் கூடுதலாக இலங்கையில் தனிமைபப்டுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 நன்றிக் கடன்

நன்றிக் கடன்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த சீரிஸ் இலங்கை அணி நிர்வாகத்துக்கும், இலங்கை வீரர்களுக்கும், இலங்கை அணிக்கும் பெரும் புத்துணர்ச்சியையும், பெரும் தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அவர்களுக்கு இந்த சீரிஸ் உண்மையில் வரப்பிரசாதம் தான். சமீப காலமாக தொடர் தோல்விகளால் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வெற்றி மருந்தாய் அமைந்துள்ளது. அதுவும், உலகத்தின் டாப் அணியாய் விளங்கி வரும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருப்பது அவர்களுக்கு கூடுதல் ஹேப்பி. உண்மையில் அவர்கள் இந்திய வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டிருப்பதை நினைத்து வருத்தம் தான் கொள்ள வேண்டும். இந்த கொரோனா காலத்தில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்து, 20 வீரர்களை அழைத்துச் சென்று, டி20 தொடரை தோற்று. இலங்கை அணி ஃபார்முக்கு வர உதவி, மூன்று வீரர்களுக்கு கொரோனாவும் ஏற்பட்டிருக்கும் இந்திய அணிக்கு, இலங்கை அணி நிர்வாகம் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நன்றிக் கடன் தவிர அவர்கள் வேறு என்ன பண்ண முடியும்? ஆனால், இப்படி பெரிய மனசு காட்டிய இந்திய அணியை வீழ்த்திய பிறகு, இலங்கையின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற Wanindu Hasaranga நடந்து கொண்ட விதம் தான் முகம் சுளிக்க வைத்தது. அபார திறமை இருக்கும் அதே நேரத்தில் சேட்டையும் அதிகமாகவே இருப்பது போல் தெரிகிறது. குறிப்பாக 2வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி எறிந்து, கையை உதறி உதறி, தனது வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். 5 பேட்ஸ்மேன்கள் கூட இந்திய அணியை வென்றுவிட்டு அவர் கையை உதறி வெறியைத் தீர்த்துக் கொள்கிறாராம்.

Story first published: Friday, July 30, 2021, 16:08 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
corona positive for two more indian cricketers - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X