For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Coronavirus : ஸ்மித், வார்னர் தலையில் இடியை இறக்கிய ஐசிசி.. பால் டேம்பரிங் பற்றி அதிர்ச்சி முடிவு!

துபாய் : கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும் போது என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஐசிசி அமைப்பு சிந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

அதில் குறிப்பாக பந்து சேதம் செய்வதை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்க ஒரு திட்டம் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.

இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஆம்புலன்ஸ்.. குத்துச்சண்டை வீரருக்கு உதவிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஆம்புலன்ஸ்.. குத்துச்சண்டை வீரருக்கு உதவிய ஸ்பைஸ்ஜெட் விமானம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்து சேத விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை பெற்ற நிலையில், இந்த தகவல் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோய் காரணமாக உலகம் முடங்கி உள்ளது. மக்கள் கூட்டமாக கூடக் கூடாது என்பதில் துவங்கி அந்த நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. எச்சில் மூலமாக பரவும் என்பதால் பொதுவெளியில் எச்சில் துப்பக் கூடாது என்பது அதில் ஒன்று.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

இந்த விஷயம் தான் கிரிக்கெட் விளையாட்டை கடுமையாக பாதித்துள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை எச்சில் தொட்டு துடைத்து பந்தின் தன்மையை, வடிவத்தை மாற்றுவார்கள். அதன் மூலம் பந்து ஸ்விங் ஆகும். அதற்கு பெரும் சிக்கலை உண்டாக்கி உள்ளது கொரோனா வைரஸ்.

முன்னெச்சரிக்கை வேண்டும்

முன்னெச்சரிக்கை வேண்டும்

கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் ஒழிப்பது சாத்தியம் இல்லை என கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் குறைந்த பின் கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுக்களும் முன்னெச்சரிக்கைகளுடன் தொடங்கக் கூடும்.

அபாயம்

அபாயம்

அப்போது கிரிக்கெட் வீரர்கள் இனி எச்சில் பயன்படுத்தி பந்தை துடைத்தால் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும். அதே சமயம் பந்தை ஸ்விங் செய்யாமல் ஒருநாள் போட்டிகளில் சமாளிக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டியில் அது மிகவும் கடினம்.

வேறு வழி உள்ளதா?

வேறு வழி உள்ளதா?

சரி, பந்தின் வடிவத்தை மாற்ற வேறு வழியே இல்லையா? உள்ளது. அப்படி வேறு சில பொருட்கள் பயன்படுத்தி பந்தை தேய்த்து அதன் வடிவத்தை மாற்றலாம். அப்படி ஒரு வேலையை செய்து தான் ஆஸ்திரேலிய வீரர்கள் 2018 ஆம் ஆண்டு சிக்கினர்.

உப்புத் தாள் வைத்து தேய்த்தார்

உப்புத் தாள் வைத்து தேய்த்தார்

2018இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வார்னர் திட்டத்தின் படி கேமரான் பான்கிராப்ட் பந்தை உப்புத் தாள் வைத்து தேய்க்க முயன்ற போது சிக்கினார். கிரிக்கெட் விதிப்படி பந்தின் வடிவத்தை வெளிப் பொருட்களை வைத்து செயற்கையாக மாற்ற முயன்றால் அது தவறு.

ஓராண்டு தடை பெற்று மீண்டனர்

ஓராண்டு தடை பெற்று மீண்டனர்

அதன் காரணமாக ஐசிசி தண்டனையோடு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தண்டனையையும் பெற்றனர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். ஓராண்டு அவர்கள் தடை பெற்று, அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஐசிசி விவாதம்

ஐசிசி விவாதம்

இந்த நிலையில், கொரோன வைரஸ்-க்கு பின் கிரிக்கெட் தொடங்கும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் விதி மாற்றங்கள் பற்றி ஐசிசி விவாதித்தது. பந்தை ஸ்விங் செய்ய வைக்கும் வகையில் அம்பயர் முன்னிலையில் செயற்கையாக பந்ததின் வடிவத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கலாமா? என ஐசிசி யோசித்து வருகிறது.

விதிப்படி அனுமதி

விதிப்படி அனுமதி

அதாவது இதுவரை தவறாக இருந்த பந்து சேதத்தை, விதிப்படி அனுமதிக்க ஐசிசி யோசித்து வருகிறது. இது உண்மை என்றால் எந்த உப்புத் தாளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓராண்டு கடும் பாதிப்புக்கு உள்ளானதோ, அதே உப்புத் தாளை வைத்து இனி அனைவரும் அம்பயர் முன் பந்தை தேய்த்து சேதம் செய்வார்கள்.

கேலிக் கூத்து

கேலிக் கூத்து

அப்படி நடந்தால் அது கிரிக்கெட் உலகில் இதுவரை நடந்த பல கேலிக் கூத்துக்களிலேயே உச்சகட்டமாக இருக்கும். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பற்றி அப்போது உலகமே பரிதாபப்படும் நிலை உருவாகும். ஆனால், இது சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, April 24, 2020, 20:28 [IST]
Other articles published on Apr 24, 2020
English summary
Coronavirus Impact : Ball tampering could become legal in cricket post coronavirus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X