For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4000 கோடி அம்பேல்.. கைமீறிப் போன நிலைமை.. சைலன்ட்டாக வேடிக்கை பார்க்கும் பிசிசிஐ.. வெளியான உண்மை!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்கவில்லை என்றால் பிசிசிஐ அமைப்புக்கு சுமார் 4,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என அதன் பொருளாளர் அருண் துமால் கூறி உள்ளார்.
அவர் சொல்வது மற்றும் பிசிசிஐயில் இருந்து வரும் தகவல்களை வைத்துப் பார்த்தால் 2020 ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்ற நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாகவே தெரிகிறது.

Recommended Video

IPL 2020 cancellation may lead to 4000 crore loss to BCCI

கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் கிரிக்கெட் எல்லாம் அவசியம் இல்லை என்ற முடிவில் மக்கள் இருந்தாலும், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய பொருளாதாரத்துக்கு சுமார் 11,000 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் நிலை என்ன?

ஐபிஎல் நிலை என்ன?

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னரும் நிலைமை மோசமாக சென்றதால் ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.

லாக்டவுன் சிக்கல்

லாக்டவுன் சிக்கல்

ஐபிஎல் தொடரை நடத்துவதில் பிசிசிஐ அமைப்புக்கு உள்ள முதல் சிக்கல் லாக்டவுன் தான். ஒரே மைதானத்தில், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினாலும், லாக்டவுன் விதிகள் அமலில் இருப்பதால் விதிப்படி போட்டியை நடத்த முடியாது.

கொரோனா பரவும் அபாயம்

கொரோனா பரவும் அபாயம்

ஒருவேளை சிறப்பு அனுமதி வாங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகளை நடத்தினாலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்ந்த ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அபாயகரமானது.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

அடுத்து இந்திய அரசு விசா வழங்க மறுத்து வரும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை இந்தியா வரவழைப்பது மிக மிக கடினமான காரியம். விமான சேவைகள் வெகுவாக முடங்கி இருக்கும் இந்த சமயத்தில் அவர்களை இந்தியா அழைத்து வருவதோடு, அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்திருக்க வேண்டும். அதுவும் சிக்கல் தான்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இந்த சூழ்நிலையில், 2020 ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களுக்கு நடத்த வாய்ப்பே இல்லை. வருட இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அப்போது அனைத்து நாடுகளும் கிரிக்கெட் தொடர்களை நடத்தி நஷ்டத்தை ஈடு கட்ட முயற்சி செய்யும். எனவே, அப்போது ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பே இல்லை.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் அதனால் பிசிசிஐக்கு 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் சமீபத்தில் கூறி இருந்தார். அது மட்டுமின்றி, பிசிசிஐ 2020 ஐபிஎல் தொடரை காப்பீடு செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனால், இந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியாமலும் போகக் கூடும்.

இரு நாடுகள் அழைப்பு

இரு நாடுகள் அழைப்பு

இதற்கிடையே இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் இருந்தால் எங்கள் நாட்டில் வந்து நடத்துங்கள் என இரண்டு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று இலங்கை. மற்றொரு நாடு ஐக்கிய அரபு அமீரகம். இதில் ஐக்கிய அரபு நாட்டில் சில ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு எடுக்கவில்லை

முடிவு எடுக்கவில்லை

பிசிசிஐ இது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் ஐபிஎல் நடத்தினாலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக உள்ளது.

 கை மீறிப் போன நிலை

கை மீறிப் போன நிலை

பிசிசிஐ-யை பொறுத்தவரை 2020 ஐபிஎல் தொடர் நடத்துவது சாத்தியமே இல்லை, நிலைமை கை மீறி போய் விட்டது என்ற முடிவுக்கே வந்து விட்டதாகவே தெரிகிறது. எனினும், இப்போதே ரத்து முடிவை அறிவிக்காமல் அமைதியாக உள்ளது.

Story first published: Wednesday, May 13, 2020, 12:13 [IST]
Other articles published on May 13, 2020
English summary
Coronavirus Impact : IPL 2020 cancellation may lead to 4000 crore loss to BCCI alone. But, they are yet to take any decision.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X