கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா!

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

Ravindra Jadeja shares a run out video, warns people on lockdown rules

எனினும், மக்கள் பலர் அத்தியாவசிய தேவை இன்றியும் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

அவர்களை எச்சரிக்கும் வகையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்!

தாக்கம்

தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை தினமும் ஒன்றிரண்டு பேர், பத்து, இருபது பேர் என பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால், தற்போது 90, 100 என உயர்ந்து வருகிறது.

அச்சம்

அச்சம்

இதுவரை இந்தியாவில் 900த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயரலாம் என்ற அச்சம் உள்ளது. அதன் காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆபத்து

ஆபத்து

ஏப்ரல் 15 வரை 21 நாட்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அரசு கூறினாலும், பலரும் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. ஆனாலும், அவர்கள் அதை உணர்வதில்லை. அதுகுறித்து ஜடேஜா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

உஸ்மான் கவாஜா ரன் அவுட்

உஸ்மான் கவாஜா ரன் அவுட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ஜடேஜா சிறப்பான ரன் அவுட் ஒன்றை செய்து இருந்தார். உஸ்மான் கவாஜா ஜடேஜா பக்கம் பந்தை அடித்து விட்டு ரன் ஓடுகிறார். எளிதாக ஒரு ரன் ஓடும் வாய்ப்பும் உள்ளது.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

ஆனால், ஜடேஜா மின்னல் வேகத்தில் பந்தை எறிந்து அவரை ரன் அவுட் செய்தார். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவராக கருதப்படும் ஜடேஜா, அந்த ரன் அவுட்டுக்காக பாராட்டப்பட்டார். அந்த வீடியோவைத் தான் பகிர்ந்துள்ளார். அதை பதிவிட்டு ஊரடங்கை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View this post on Instagram

Stay safe, stay at home. Runout matt hona. ❌ 🎥- @foxcricket @cricketcomau

A post shared by Ravindra Jadeja (@royalnavghan) on Mar 25, 2020 at 1:38am PDT

இன்ஸ்டாகிராம் பதிவு

அந்த பதிவின் கீழ் "பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள். இல்லையெனில் ரன் அவுட் ஆகி விடுவீர்கள்" என எச்சரிக்கும் விதமாக கூறி உள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த பதிவு அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அஸ்வின் எச்சரிக்கை

அஸ்வின் எச்சரிக்கை

முன்னதாக மற்றொரு கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐபிஎல் தொடரில் தான் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ததை பதிவிட்டு, கிரீஸை விட்டு வெளியே வந்தால் அவுட் ஆகி விடுவீர்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தார். தற்போது ஜடேஜாவும் அதே முறையில் எச்சரிக்கை செய்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Coronavirus Lockdown : Ravindra Jadeja warns people not following lockdown rules using a video.
Story first published: Saturday, March 28, 2020, 14:26 [IST]
Other articles published on Mar 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more