For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனவாத சீண்டல்ல ஈடுபட்டவங்களை அடையாளம் காண முடியலை... கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்கள் இனவாத சீண்டல்களில் ஈடுபட்டனர்.

முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரிடம் இந்த சீண்டல்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து சிராஜ் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.

பிசிசிஐயும் இந்த விவகாரம் குறித்து புகார் தெரிவித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அந்த நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இனவாத சீண்டல்கள்

இனவாத சீண்டல்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில் அந்த போட்டியை இந்தியா கடும் முயற்சி மேற்கொண்டு டிரா செய்தது. இந்த போட்டியில் சிராஜ் சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். ஆனால் சிராஜ் மற்றும் பும்ராமீது மைதானத்தில் இருந்தவர்கள் இனவாத ரீதியான சீண்டல்களை மேற்கொண்டனர்.

தடைபட்ட போட்டி

தடைபட்ட போட்டி

இந்த விவகாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சிராஜ் புகார் தெரிவித்த நிலையில், சில நிமிடங்கள் போட்டி தடைபட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாக மைதானத்தில் இருந்த 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.

சிஏ அறிக்கை

சிஏ அறிக்கை

இந்த விவகாரம் குறித்து பிசிசிஐயும் புகார் தெரிவித்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஐசிசி உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிஏ காத்திருப்பு

சிஏ காத்திருப்பு

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அதில் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நியூ சவுத் வேல்சின் அறிக்கைக்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா காத்துள்ளது.

Story first published: Wednesday, January 27, 2021, 12:25 [IST]
Other articles published on Jan 27, 2021
English summary
Play was halted during the third Test due to alleged racist abuse
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X