For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட ரிடையர்மெண்ட்... கொரோனா வைரசோட பங்கும் அதுல இருக்கு.. சஹல் விளக்கம்

டெல்லி : கோவிட் -19 பாதிப்பு முன்னாள் கேப்டன் தோனியின் ரிடையர்மெண்ட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றால் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடியிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே தான் தற்போதும் கருதுவதாகவும், அவருடைய ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி அளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

தோனி ஓய்வு : இப்படியா வீட்டுல உட்கார்ந்துகிட்டு அறிவிப்பாங்க? முன்னாள் பாக். கேப்டன் கடும் விமர்சனம்தோனி ஓய்வு : இப்படியா வீட்டுல உட்கார்ந்துகிட்டு அறிவிப்பாங்க? முன்னாள் பாக். கேப்டன் கடும் விமர்சனம்

தோனி ஓய்வு குறித்து சஹல் அதிர்ச்சி

தோனி ஓய்வு குறித்து சஹல் அதிர்ச்சி

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களும் இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எப்போதுமே தோனியின் அபிமானியாக உள்ள குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலும் இதுகுறித்து தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தோனி ஓய்வில் முக்கிய பங்கு

தோனி ஓய்வில் முக்கிய பங்கு

மேலும் கொரோனா வைரஸ் தொற்று தோனியின் ஓய்வு அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக டி20 உலக கோப்பை வரும் 2022க்கு தள்ளி போயுள்ள நிலையில், அவ்வாறு இல்லாமல் இருந்திருந்தால், தோனி டி20 உலக கோப்பை தொடரில் விளையாடியிருந்திருப்பார் என்றும் அவருடைய ஓய்வும் தள்ளி போயிருக்கும் என்றும் சஹல் கூறியுள்ளார்.

வெற்றிபெற வழிகாட்டிய தோனி

வெற்றிபெற வழிகாட்டிய தோனி

நியூஸ் 18 இந்தியாவின் சிறப்பு நிகழ்ச்சியான சாவ்பாலில் பேசிய அவர், தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அணியில் தனக்கும் குல்தீப் யாதவிற்கும் வெற்றிக்கான வழிகளை தோனி காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். அவரிடம் இருந்து தங்களுக்கு ஆட்டத்தின்போது அதிகப்படியான உதவிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோனி இருந்தால் வேலை எளிது

தோனி இருந்தால் வேலை எளிது

தோனி ஆட்டத்தில் இருந்தால் 50 சதவிகித பணிகள் ஏற்கனவே முடிந்திருக்கும் என்றும் பிட்ச் எவ்வாறு செயல்படும் என்று அவருக்கு தெரியும் என்றும் அதற்கேற்றாற்போல அவர் ஆட்டத்தை வடிவமைப்பார் என்றும் சஹல் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் பிட்ச் குறித்து அறிவதற்கே 2 ஓவர்கள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, August 19, 2020, 12:07 [IST]
Other articles published on Aug 19, 2020
English summary
Dhoni was not there, we would take two overs to understand the pitch -Chahal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X