செம ஸ்ட்ரைக் ரேட்.. ஐபிஎல்-லுக்கு முன் கலக்கப் போகும் அதிரடி மன்னன்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கரீபியன் பிரீமியர் லீக் 2020 டி20 லீக் தொடரில் தன் அதிரடி ஆட்டத்தை ஆடப் போகும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IPL 2020: Star Sports charges for Advertisement | Oneindia Tamil

ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் அதிரடி ஆட்டம் ஆடி பெரும் எதிர்பார்ப்பு கிளப்பினார் ரஸ்ஸல். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தாலவாஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆண்ட்ரே ரஸ்ஸல் அந்த அணியை கோப்பை வெல்ல வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜமைக்கா தாலவாஸ் அணி 2013 மற்றும் 2016இல் கோப்பை வென்றது. பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணியும் இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறை வென்றுள்ளது.

ஜமைக்கா தாலவாஸ் அணி இந்த சீசனில் கோப்பை வென்றால் மூன்று முறை கோப்பை வென்ற அணியாக மாறும். இந்த சாதனையை செய்ய ஆண்ட்ரே ரஸ்ஸல் கை கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏழு ஐபிஎல் சீசன்களில் ஆடி உள்ள ரஸ்ஸல் 1109 ரன்கள் குவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கிறார். இரண்டு சதமும் அடித்துள்ளார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் தான் சிறப்பானது.

சிஎஸ்கே அணியின் வயதான வீரருக்கு கல்தா.. இனிமே புது வீரருக்குத் தான் சான்ஸ்.. தோனி அதிரடி திட்டம்!

ஆண்ட்ரே ரஸ்ஸல் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 181 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அந்த தொடரில் இதுதான் அதிகம். அவருக்கு அடுத்து அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர் நிக்கோலஸ் பூரன். அவரது ஸ்ட்ரைக் ரேட் 154 ஆகும்.

அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் இந்த முறை அதிக ரன்களும் அடித்தால் ஜமைக்கா அணி கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CPL 2020 : Andre Russell with highest strike rate in CPL is expected to bring the crown back to Jamaica Tallawahs.
Story first published: Friday, August 14, 2020, 16:44 [IST]
Other articles published on Aug 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X