For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறும் 3 ரன்னுங்க.. கவுந்து போச்சே பார்படாஸ்.. சொல்லி அடித்த செயின்ட் லூசியா!

போர்ட் ஆப் ஸ்பெயின்: கம்மியா அடிச்ச ஸ்கோரை அழகாக சமாளித்து வெற்றியும் பெற்று சிபிஎல்லில் புதிய சாதனை படைத்துள்ளது செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி.

அந்த அணியின் கெஸ்ரிக் வில்லியம்ஸும், ஸ்பின்னர்களும் இணைந்து பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணிக்கு தோல்வியைப் பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தனர். பார்படாஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு இது பெரும் பின்னடைவாகப் போய் விட்டது.

உண்மையில் பார்படாஸ் அணி தனது பவுலிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது. செயின்ட் லூசியா அணியின் பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்து விட்டனர் பார்படாஸ் பவுலர்கள். குறிப்பாக ஹெய்டன் வால்ஷ் அபாரமாக பந்து வீசினார். ஆனால் பின்னர் பேட்டிங்கின்போது அந்த அணி சொதப்பி விட்டது.

இவர் தான் வெற்றிக்கு காரணம்.. நான் அடிச்ச அந்த 2 சிக்ஸ் இல்லை.. மனம் திறந்து பாராட்டிய ரோஹித் சர்மா!இவர் தான் வெற்றிக்கு காரணம்.. நான் அடிச்ச அந்த 2 சிக்ஸ் இல்லை.. மனம் திறந்து பாராட்டிய ரோஹித் சர்மா!

பவுலிங் அசத்தல்

பவுலிங் அசத்தல்

பார்படாஸ் அணியின் பந்து வீச்சில் ஜோஷுவா பிஷப் சிறப்பாக செயல்பட்டார். முதல் ஓவரிலேயே ரக்கீம் கார்ன்வெல்லைக் காலி செய்தார். அடித்து ஆடி வந்த ஆன்ட்ரூ பிளட்சரை பார்படாஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். 2 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்தது செயின்ட் லூசியா.

சூப்பர் வால்ஷ்

சூப்பர் வால்ஷ்

ஹெய்டன் வால்ஷ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். மறுபக்கம், பிஷப், ஹோல்டர், கான், நர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்த, ரீபருக்கு 2 விக்கெட் கிடைத்தது. பார்படாஸின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 18 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆன செயின்ட் லூசியா அணி, 92 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. செயின்ட் லூசியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸாட்ரன் 22 ரன்களை எடுத்தார். பெளச்ச்சர் 18, ஆர். சேஸ் 14 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைவருமே சிங்கிள் ரன்கள்தான்.

பார்படாஸுக்கு ஷாக்

பார்படாஸுக்கு ஷாக்

பின்னர் ஆட வந்த பார்படாஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது செயின்ட் லூசியா அணியின் பந்து வீச்சு.. சும்மா சொல்லக் கூடாது. தங்களது ஸ்பின்னர்களை வைத்து செயின்ட் லூசியா, பார்படாஸுக்கு விளையாட்டுக் காட்டி விட்டது. தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் மட்டுமே சிறப்பாக ஆடினார். 39 ரன்களை அவர் 42 பந்துகளில் எடுத்தார். அவருக்கு அடுத்து சொல்லிக் கொள்ளும்படி விளையாடியது ஹோப் மட்டுமே. அவரது பங்கு 14 ரன்கள்தான்.

அடுத்தடுத்து விக்கெட் சாய்ப்பு

அடுத்தடுத்து விக்கெட் சாய்ப்பு

நர்ஸ் 12, ஆண்டர்சன் 11, என வீழ. மற்ற வீரர்கள் சிங்கிள் ரன்களில் விழுந்தனர். கிளன் மற்றும் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்களைச் சாய்த்து செயின்ட் லூசியா அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். முகம்மது நபி மற்றும் சேஸ் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது. மிக சொற்பமாக ரன் குவித்தாலும் கூட அதையும் சமாளித்து தங்களது பந்து வீச்சின் மூலம் பார்படாஸை சிதறடித்து விட்டனர் செயின்ட் லூசியா வீரர்கள். பார்படாஸ் அணி 20 ஓவர்கள் விளையாடியும் கூட 89 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

3 ரன்களில் சாதனை

3 ரன்களில் சாதனை

வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பெற்றது செயின்ட் லூசியா அணி. சொதப்பலான பேட்டிங் மூலம் எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை கோட்டை விட்டது பார்படாஸ் அணி. சிபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த ஸ்கோர் எடுத்தும் கூட வெற்றியைத் தொட்ட முதல் அணி என்ற புதிய சாதனையைப் படைத்து விட்டது செயின்ட் லூசியா அணி.

Story first published: Monday, August 31, 2020, 14:29 [IST]
Other articles published on Aug 31, 2020
English summary
CPL 2020: Barbados Tridents faced a 3 run defeat at the hands of St Lucia Zouks
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X