For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா டி20 மேட்ச்சில் ஆடுவாங்க? ஒரு நியாய தர்மம் வேணாமா? நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்!

டரூபா : டி20 போட்டிகளில் ஓவருக்கு 6 ரன்கள் என்பதே குறைவான ஸ்கோர் தான். அப்படி ஆடினால் கூட 120 ரன்கள் எடுக்க முடியும்.

Recommended Video

CSK Players test Negative, likely to play with Mumbai Indians in Opener | OneIndia Tamil

ஆனால், பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி கடந்த மூன்று லீக் போட்டிகளில் 20 ஓவர்களில் 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 89 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி ஒரு இன்னிங்க்ஸில் 100 ரன் எடுக்காமல் ஹாட்ரிக் எடுத்தது அந்த அணி.

சிபிஎல் 2020 : இந்திய ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி.. நைட் 7.30 மணிக்குதான் இறுதிப்போட்டி நடக்குதாம்சிபிஎல் 2020 : இந்திய ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி.. நைட் 7.30 மணிக்குதான் இறுதிப்போட்டி நடக்குதாம்

மூன்று போட்டிகள்

மூன்று போட்டிகள்

ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் என்ற சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் 89 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது பார்படோஸ். அடுத்து கயானா அணிக்கு எதிராக 92 ரன்களில் ஆட்டமிழந்து அந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்தது. கயானா அணியுடனான இரண்டாவது லீக் போட்டியிலும் அதே சோகம் தொடர்ந்தது.

26வது லீக் போட்டி

26வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 26வது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது பார்படோஸ் அணி.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

இந்தப் போட்டியில் கயானா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பார்படோஸ் அணி வழக்கம் போல வரிசையாக விக்கெட்களை இழக்கத் துவங்கியதுடன் படு நிதானமாக ஆடியது. துவக்க வீரர்கள் சார்லஸ், க்ரீவ்ஸ் ஆளுக்கு 10 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர்.

ரஷித் கான் ஏமாற்றம்

ரஷித் கான் ஏமாற்றம்

ஆல் - ரவுண்டர் ரஷித் கானை மூன்றவதாக பேட்டிங் இறக்கி அதிரடியாக ரன் சேர்க்கலாம் என்ற கேப்டன் ஹோல்டரின் முயற்சி வீணானது. ரஷித் கான் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ப்ரூக்ஸ் 8, மேயர்ஸ் 7, ஹோல்டர் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மானத்தை காப்பாற்றிய இருவர்

மானத்தை காப்பாற்றிய இருவர்

மிட்செல் சான்ட்னர் 27 பந்துகளில் 18 ரன்களும், நயீம் யங் 17 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றி 50 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செல்ல உதவினர். இறுதியில் நர்ஸ் 7, ரெய்பர் 7 ரன்கள் எடுக்க பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இம்ரான் தாஹிர் அபாரம்

இம்ரான் தாஹிர் அபாரம்

கயானா அணியின் அனைவரும் கட்டுக் கோப்பாக பந்து வீசி இருந்தனர். இம்ரான் தாஹிர் மீண்டும் ஒரு அபார பந்துவீச்சை பதிவு செய்தார். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் அவர். ஷெப்பர்ட் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். க்ரீன், சின்கிளேர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பிரான்டன் கிங் டக் அவுட்

பிரான்டன் கிங் டக் அவுட்

90 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய கயானா அணிக்கு பிரான்டன் கிங் டக் அவுட் ஆகி மோசமான துவக்கம் அளித்தார். ஹேம்ராஜ் 29 ரன்கள் சேர்த்தார். அடுத்து ரூதர்போர்டு 1, பூரன் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

வெற்றி

வெற்றி

ஹெட்மயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 32 ரன்கள் குவித்தார். ராஸ் டெய்லர் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி 16 ரன்கள் எடுத்தார். கயானா அணி 14.2 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. பார்படோஸ் அணி தோல்வியால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

Story first published: Friday, September 4, 2020, 17:45 [IST]
Other articles published on Sep 4, 2020
English summary
CPL 2020 BT vs GAW : Barbados Tridents vs Guyana Amazon Warriors 26th Match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X