For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆமையே அசிங்கப்பட்டுரும்.. அப்படி ஆடுறாப்புல.. அடுத்த பிளைட்லையே ஊருக்கு அனுப்புங்க.. ரசிகர்கள் கதறல்

டரூபா : ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் மோசமான பார்மில் ஆடி வருகிறார்.

Recommended Video

IPL 2020 Schedule நாளை வெளியீடு: Ganguly அறிவிப்பு | OneIndia Tamil

துவக்கத்தில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வந்த அவர், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படு நிதான ஆட்டம் ஆடி தன் அணியை கவிழ்த்தார்.

WWE ஜாம்பவான் “தி ராக்”-கிற்கு கொரோனா பாதிப்பு.. குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று!WWE ஜாம்பவான் “தி ராக்”-கிற்கு கொரோனா பாதிப்பு.. குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று!

ஐபிஎல் வீரர்கள்

ஐபிஎல் வீரர்கள்

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பல ஐபிஎல் வீரர்கள் ஆடி வருகின்றனர். அதில் ஒருவர் தான் கிறிஸ் லின். 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார் கிறிஸ் லின். ஆனால், அவரது ஆட்டம் முன்பு போல இல்லை.

நீக்கம்

நீக்கம்

இதை அடுத்து கொல்கத்தா அணி அவரை நீக்கியது. 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யாருமே ஏலம் கேட்காமல் பரிதாபமாக இருந்தார் கிறிஸ் லின். கடைசி நிமிடத்தில் அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

பதிலடி

பதிலடி

அதன் பின் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி தன் மீதான விமர்சனங்களை உடைத்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெறும் முதல் பெரிய லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டி

கரீபியன் பிரீமியர் லீக் போட்டி

அந்த தொடரின் 23வது லீக் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது.

லீவிஸ் ஏமாற்றம்

லீவிஸ் ஏமாற்றம்

பெரிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் லின் - ஈவின் லீவிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முந்தைய போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த லீவிஸ் இந்தப் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஆமையை விட மெதுவாக..

ஆமையை விட மெதுவாக..

அடுத்து கிறிஸ் லின் - ஜோஷுவா டா சில்வா இணைந்து ஆடினர். ஜோஷுவா ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் ரன் சேர்த்தார். 175 ரன்களை சேஸ் செய்த நிலையில் அதுவே ஆமை வேக பேட்டிங் தான். ஆனால், கிறிஸ் லின் அந்த ஆமை வேகத்தை விடவும் மெதுவாக ஆடினார்.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

46 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் அதிர்ச்சி அளித்தார் லின். அவரது ஸ்ட்ரைக் ரேட் 74 மட்டுமே. அவரது பேட்டிங்கை கண்ட ரசிகர்கள் கடுப்பானார்கள். அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யுமாறு ஒருவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கே அனுப்பி விடுங்கள்

ஆஸ்திரேலியாவுக்கே அனுப்பி விடுங்கள்

பல ரசிகர்கள் அவர் பார்ம் அவுட் ஆகி விட்டார். பழைய அதிரடி கிறிஸ் லின்-ஐ இனி எதிர்பார்க்க முடியாது. தயவு செய்து அவரை ஆஸ்திரேலியாவுக்கே அனுப்பி விடுங்கள் என கோரிக்கை வைக்கத் துவங்கினர்.

படுதோல்வி

படுதோல்வி

இந்த சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த ஒரு போட்டியில் மட்டும் கிறிஸ் லின் 20 ரன்களை தாண்டி ரன் குவித்தார். ஆமையே அவமானப்படும் வகையில் கிறிஸ் லின் ஆடிய ஆட்டத்தால் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

Story first published: Thursday, September 3, 2020, 19:18 [IST]
Other articles published on Sep 3, 2020
English summary
CPL 2020 : Chris Lynn slow batting under scrutiny by some fans. Some of them want him to return to Australia as he lose his golden days with the bat in T20’s.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X