For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அய்யா.. எனக்கு கேப்டன்சியே வேணாம் விட்ருங்க.. கெஞ்சிய பிராவோ.. நண்பனை கேப்டனாக்கிய அணி நிர்வாகம்

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : டிவைன் பிராவோ கேப்டன் பதவியே வேண்டாம் என இரண்டு ஆண்டுகளாக கூறியதை அடுத்து இந்த சீசனில் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

அவர் சிஎஸ்கே அணியில் எங்கே கேப்டனாக இருந்தார்? என குழம்ப வேண்டாம். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்திடம் தான் பிராவோ இப்படி கூறி உள்ளார்.

இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?இங்கிலாந்து -பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி... விட்டதை பிடிக்குமா பாகிஸ்தான் அணி?

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று வருகின்றன. ஐபிஎல் தொடர் போலவே நடக்கும் இந்த டி20 லீக்கிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அதிரடி ஆட்டம் தான்.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்

அந்த ஆறு அணிகளின் ஒன்று தான் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ். இது ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்களால் நடத்தப்படும் அணி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே பயிற்சியாளர் குழு இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் டிவைன் பிராவோ

கேப்டன் டிவைன் பிராவோ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சில வீரர்களும் கூட அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சிஎஸ்கே அணியில் தோனியின் நம்பகமான ஆல் - ரவுண்டரான டிவைன் பிராவோ தான் ட்ரின்பாகோ அணியில் 2017 மற்றும் 2018இல் கேப்டனாக செயல்பட்டார்.

2019 சீசன்

2019 சீசன்

கேப்டனாக இருந்து அந்த இரண்டு சீசன்களிலும் அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார் பிராவோ. துரதிர்ஷ்டவசமாக 2019ஆம் ஆண்டு அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் அந்த சீசன் முழுவதும் ஆட முடியவில்லை. இந்த நிலையில், 2020இல் பிராவோ மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

கீரான் பொல்லார்டு கேப்டன் ஆனார்

கீரான் பொல்லார்டு கேப்டன் ஆனார்

கடந்த சீசனில் கீரான் பொல்லார்டு ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்த கேப்டன் பிராவோ அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இருவரில் யாரை கேப்டன் ஆக்குவார்கள்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

கீரான் பொல்லார்டு தற்போது வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரையே கேப்டனாக தொடர வைத்துள்ளது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம். இது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் விளக்கம் அளித்துள்ளார்.

பிராவோ என்ன சொன்னார்?

பிராவோ என்ன சொன்னார்?

பிராவோ ஒவ்வொரு ஆண்டும் தன்னிடம் கேப்டன்சியை வேறு யாருக்காவது கொடுக்குமாறு கேட்பார், அதன் மூலம் தான் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த முடியும் என அவர் நினைத்தார். இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. அவர் பொல்லார்டுக்கு கீழ் ஆடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றார் வெங்கி மைசூர்.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

பிராவோ - கீரான் பொல்லார்டு இருவரும் நல்ல நண்பர்கள். களத்தில் கூட ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வார்கள். ஐபிஎல் தொடரில் இருவரும் எதிரி அணிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 12, 2020, 21:08 [IST]
Other articles published on Aug 12, 2020
English summary
CPL 2020 : Dwayne Bravo asked to give captaincy to someone else says Trinbago Knight Riders CEO Venky Mysore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X