For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5வது ஓவரில் கிறிஸ் லின் செய்த காரியம்.. அடுத்த ஓவரில் கொட்டிய மழை.. போட்டியே நின்னு போச்சு!

டரூபா : நடக்காத காரியம் ஒன்று நடக்கும் போது மழை பெய்யும் என்று சொல்வார்கள்.

அப்படித் தான் கிறிஸ் லின் விஷயத்தில் நடந்துள்ளது. கரீபியன் பிரீமியர் லீக்கில் தன் அணியின் அரை இறுதி வாய்ப்பை எல்லாம் ஆமை வேக ஆட்டம் ஆடி ஓய்த்து இருந்தார் அவர்.

ஆமையே அசிங்கப்பட்டுரும்.. அப்படி ஆடுறாப்புல.. அடுத்த பிளைட்லையே ஊருக்கு அனுப்புங்க.. ரசிகர்கள் கதறல்ஆமையே அசிங்கப்பட்டுரும்.. அப்படி ஆடுறாப்புல.. அடுத்த பிளைட்லையே ஊருக்கு அனுப்புங்க.. ரசிகர்கள் கதறல்

சிக்ஸர் மழை?

சிக்ஸர் மழை?

திடீரென அவர் அதிரடி ஜமைக்கா அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடினார். ஒரே ஓவரில் ஃபோர், வரிசையாக சிக்ஸ் என பட்டையைக் கிளப்பினார். அடடா.. கிறிஸ் லின் பார்முக்கு வந்து விட்டார், இனி சிக்ஸர் மழை தான் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், வந்தது சிக்ஸர் மழை அல்ல.

25வது லீக் சுற்றுப் போட்டி

25வது லீக் சுற்றுப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 25வது லீக் சுற்றுப் போட்டி ஜமைக்கா தலவாஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு முன் பேட்ரியாட்ஸ் அணி அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து இருந்தது.

அரை இறுதி வாய்ப்பு

அரை இறுதி வாய்ப்பு

இந்தப் போட்டியில் வென்று, ஜமைக்கா, பார்படோஸ் தாங்கள் ஆடும் மற்ற போட்டிகளில் தோற்றால் பேட்ரியாட்ஸ் அணி அரை இறுதி செல்ல நூலிழையில் ஒரு வாய்ப்பு இருந்தது. மறுபுறம் ஜமைக்கா அணிக்கு இந்தப் போட்டி வெற்றி அரை இறுதி வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்ற நிலை இருந்தது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஜமைக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போதே வானம் இருட்டிக் கொண்டு தான் இருந்தது. அப்போது பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. ஈவின் லீவிஸ் - கிறிஸ் லின் துவக்கம் அளித்தனர்.

கிறிஸ் லின் நிலை

கிறிஸ் லின் நிலை

கிறிஸ் லின் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் தான் 20 ரன்களை தாண்டினார். 34 ரன்கள் எடுத்த அவர், 175 ரன்களை சேஸ் செய்த போது 46 பந்துகளில் அந்த ரன்களை எடுத்து இருந்தார். ஆமை வேக ஆட்டம் ஆடி தன் அணியை தோல்வி அடைய வைத்தார்.

சொதப்பப் போகிறார்

சொதப்பப் போகிறார்

அதற்கு அடுத்த போட்டி தான் இது. லீவிஸ் வழக்கம் போல ஆடி வந்தார். கிறிஸ் லின் 4 ஓவர்கள் முடிவில் 12 பந்துகள் சந்தித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ரசிகர்கள் பலர் கிறிஸ் லின் மீண்டும் சொதப்பப் போகிறார் என்றே எண்ணினர்.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

அப்போது 5வது ஓவரில் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வரும் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் வரிசையாக ஒரு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்தார். ஆஹா.. கிறிஸ் லின் பார்முக்கு வந்து விட்டார் என ரசிகர்கள் குஷியானார்கள்.

நீண்ட நேரம் மழை

நீண்ட நேரம் மழை

அதற்கு அடுத்த ஓவரில் லீவிஸ் ஆடி வந்த போது மழை பெய்யத் துவங்கியது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் போட்டியை துவக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மைதானம் தெப்பக் குளம் போல காட்சி அளித்தது.

போட்டி கைவிடப்பட்டது

போட்டி கைவிடப்பட்டது

இனி போட்டி நடத்த முடியாது என்ற நிலையில் அம்பயர்கள் போட்டியை கைவிட முடிவு செய்தனர். பேட்ரியாட்ஸ் அணி இந்தப் போட்டியுடன் அரை இறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்தது. கிறிஸ் லின் திடீரென பார்முக்கு வந்ததால் தான் மழை வந்தததோ என்னவோ!

Story first published: Thursday, September 3, 2020, 23:50 [IST]
Other articles published on Sep 3, 2020
English summary
CPL 2020 : Jamaica Tallawahs vs St Kitts and Nevis Patriots 25th Match result - Chris Lynn came to form but the match was abandoned due to heavy rain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X