For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

17 பந்தில் 41 ரன்.. வெறியாட்டம் ஆடிய கேப்டன் பொல்லார்டு.. செமயாக அடி வாங்கிய சிஎஸ்கே வீரர்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கீரான் பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தார்.

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 4 ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார் பொல்லார்டு.

அவரா இப்படி? 8 பந்தில் 1 ரன் கூட அடிக்கலை.. ரசிகர்கள் ஏமாற்றம் அதிரடி மன்னனுக்கு நேர்ந்த கதி!அவரா இப்படி? 8 பந்தில் 1 ரன் கூட அடிக்கலை.. ரசிகர்கள் ஏமாற்றம் அதிரடி மன்னனுக்கு நேர்ந்த கதி!

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 9வது லீக் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பார்படோஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, ட்ரின்பாகோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிதான துவக்கம்

நிதான துவக்கம்

ட்ரின்பாகோ அணியின் துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் சுனில் நரைன் நிதான துவக்கம் அளித்தனர். சிம்மன்ஸ் முதல் சில பந்துகளை வீணடித்தார். நரைன் எப்போதும் அதிரடி ஆட்டம் ஆடுவார். ஆனால், இந்தப் போட்டியில் அவரும் தடுமாறினார்.

மன்றோ அதிரடி

மன்றோ அதிரடி

சிம்மன்ஸ் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மன்றோ அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், நரைன் மோசமாக ஆடி 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது ட்ரின்பாகோ அணி.

பொல்லார்டு அதிரடி

பொல்லார்டு அதிரடி

மன்றோ 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து நர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது நிதான ஆட்டம் ஆடி வந்த டேரன் பிராவோவுடன் இணைந்த கேப்டன் கீரான் பொல்லார்டு அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கினார். அணியின் ரன் ரேட் அதிகரிக்கத் துவங்கியது.

மிட்செல் சான்ட்னர் ஓவர்

மிட்செல் சான்ட்னர் ஓவர்

கடைசி 4 ஓவர்களில் இருவரும் அதிரடியாக ரன் குவித்தனர். மிட்செல் சான்ட்னர் வீசிய 17வது ஓவரில் 19 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ரெய்பர் வீசிய 18வது ஓவரில் 20 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் ட்ரின்பாகோ அணி 185 ரன்கள் குவித்தது.

17 பந்துகளில் 41 ரன்கள்

17 பந்துகளில் 41 ரன்கள்

பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து துவம்சம் செய்து இருந்தார். 1 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். பிராவோ 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். பொல்லார்டு அதிரடி ஆட்டத்தால் ட்ரின்பாகோ அணி கடைசி 4 ஓவர்களில் 69 ரன்கள் குவித்து இருந்தது.

பரிதாபம்

பரிதாபம்

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள மிட்செல் சான்ட்னர் நிலை தான் பரிதாபம். அவருக்கு துவக்கம் முதல் பந்து வீச வாய்ப்பு அளிக்காத பார்படோஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், 17வது ஓவரில் தான் வாய்ப்பு அளித்தார்.

சான்ட்னர் - ரெய்பர்

சான்ட்னர் - ரெய்பர்

சிக்ஸ் அடிக்க காத்துக் கொண்டிருந்த பிராவோ - பொல்லார்டுக்கு அது அருமையான வாய்ப்பாக அமைந்தது. இருவரும் விளாசித் தள்ள அவர் 1 ஓவர் மட்டுமே வீசி 19 ரன் கொடுத்து இருந்தார். ரெய்பர் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து இருந்தார்.

Story first published: Sunday, August 23, 2020, 22:41 [IST]
Other articles published on Aug 23, 2020
English summary
CPL 2020 : Kieron Pollard hit 17 ball 41 runs against Barbados Tridents. Colin Munro scored 50 and Darren Bravo hit 54 not out. Mitchell Santner leaks 19 runs in a single over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X