கிறிஸ் கெயில் தான் டாப்.. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன் குவித்த 5 வீரர்கள்!

ஜமைக்கா : கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிதிநிலையில் சரிவை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் இந்த தொடர் மூலம் ஓரளவு மீளலாம் என திட்டமிட்டு உள்ளது.

2013 முதல் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதல் இடம் பிடித்துள்ளார்.

தங்குமிடங்கள் தயார்... யூஏஇக்கு பேமிலி இல்லாமல் பயணமாகும் சிஎஸ்கே வீரர்கள்

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில் அந்த தொடரில் 76 போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவர் 4 சதம், 13 அரைசதங்களுடன் 2354 ரன்கள் குவித்துள்ளார். அந்த தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 39.23 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 133.

லயோனல் சிம்மன்ஸ்

லயோனல் சிம்மன்ஸ்

கெயிலுக்கு அடுத்த இடத்தில் லயோனல் சிம்மன்ஸ் 71 போட்டிகளில் 2080 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 16 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 33.01 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 120.

ஆண்ட்ரே பிளட்சர்

ஆண்ட்ரே பிளட்சர்

மூன்றாவது இடத்தில் ஆண்ட்ரே பிளட்சர் இடம் பிடித்துள்ளார். அவர் 66 போட்டிகளில் 1870 ரன்கள் குவித்துள்ளார். அவரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 11 அரைசதம் அடித்துள்ளார். அவரது சராசரி 31.16 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 117.

ஜான்சன் சார்லஸ்

ஜான்சன் சார்லஸ்

நான்காவது இடத்தில் ஜான்சன் சார்லஸ் இடம் பிடித்துள்ளார். அவர் 68 போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 12 அரைசதங்கள் அடித்து, ஒட்டு மொத்தமாக 1842 ரன்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 27.90 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 130.

சாட்விக் வால்டன்

சாட்விக் வால்டன்

ஜமைக்காவை சேர்ந்த சாட்விக் வால்டன் 73 போட்டிகளில் 1779 ரன்கள் குவித்துள்ளார். வால்டன் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 9 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 26.55 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 121.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
CPL 2020 : Top 5 batsmen list - Most runs in Caribbean Premier League 2020
Story first published: Friday, August 7, 2020, 16:25 [IST]
Other articles published on Aug 7, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X