For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

96 ரன், 7 ஃபோர், 6 சிக்ஸ்.. சிம்மன்ஸ் மிரட்டல்.. நைட் ரைடர்ஸ் வெற்றி.. பேட்ரியாட்ஸ் செய்த அலங்கோலம்!

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக செயல்பட்டு பேட்ரியாட்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Recommended Video

Malinga to miss IPL 2020, Pattinson replaces him | OneIndia Tamil

பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சில் நல்ல பந்துவீச்சாளரை பயன்படுத்தாமல் இருந்ததுடன், அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் லின் நிதான ஆட்டம் ஆடியதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆனது.

டாப் வீரருக்கு பாதிப்பு.. சிஎஸ்கே மாதிரி பெயரை சொல்லாமல் அடம் பிடித்த பிஎஸ்ஜி.. வெளியான உண்மை!டாப் வீரருக்கு பாதிப்பு.. சிஎஸ்கே மாதிரி பெயரை சொல்லாமல் அடம் பிடித்த பிஎஸ்ஜி.. வெளியான உண்மை!

முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 23வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து தான் பங்கேற்ற ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய மாற்றம் செய்து இருந்தது.

பொல்லார்டு, நரைன் இல்லை

பொல்லார்டு, நரைன் இல்லை

நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரான் பொல்லார்டு மற்றும் அதிரடி ஆல் - ரவுண்டர் சுனில் நரைன் என இரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்தது அந்த அணி. டிவைன் பிராவோ கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்த அணிக்கு சிம்மன்ஸ் - ஜங்கூ துவக்கம் அளித்தனர்.

மன்றோ காயம்

மன்றோ காயம்

ஜங்கூ 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முக்கிய அதிரடி பேட்ஸ்மேன் மன்றோ 9 ரன்கள் எடுத்த நிலையில் காயம் ஏற்பட்டு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து டேரன் பிராவோ களமிறங்கினார். அவர் 36 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

சிம்மன்ஸ் அதிரடி

சிம்மன்ஸ் அதிரடி

மறுபுறம் சிம்மன்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். சிம்மன்ஸ் 63 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் தான் ஆட்டமிழந்தார். அவர் 7 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து மிரட்டினார். கேப்டன் பிராவோ கடைசி ஓவரின் கடைசி பந்தை மட்டுமே எதிர்கொண்டு அதில் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

பேட்ரியாட்ஸ் சொதப்பல்

பேட்ரியாட்ஸ் சொதப்பல்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. பேட்ரியாட்ஸ் அணியின் பந்துவீச்சில் இந்த தொடரில் கட்டுக்கோப்பாக பந்துவீசி வரும் இம்ரான் கானுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு அளிக்கவில்லை அந்த அணியின் கேப்டன் ரியாத் எம்ரிட்.

கிறிஸ் லின்

கிறிஸ் லின்

அடுத்து சேஸிங்கில் அதை விட படுமோசமாக சொதப்பினார் கிறிஸ் லின். துவக்க வீரர் ஈவின் லீவிஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கிறிஸ் லின் - ஜோஷுவா டா சில்வா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டம் ஆடினர்.

படு நிதான ஆட்டம்

படு நிதான ஆட்டம்

ஜோஷுவா 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். ஆனால், கிறிஸ் லின் டெஸ்ட் போட்டி போல படு நிதான ஆட்டம் ஆடி தன் அணியை கவிழ்த்தார். அவர் 46 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 74 மட்டுமே.

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். லின் ஆட்டமிழந்த போதே ஓவருக்கு 13 - 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் பேட்ரியாட்ஸ் அணி சரிந்தது.

நைட் ரைடர்ஸ் வெற்றி

நைட் ரைடர்ஸ் வெற்றி

பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறப்பாக பந்துவீசிய 48 வயது இந்திய வீரரான பிரவின் டாம்பே 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Story first published: Thursday, September 3, 2020, 1:07 [IST]
Other articles published on Sep 3, 2020
English summary
CPL 2020 : Trinbago Knight Riders vs St Kitts and Nevis Patriots 23rd match report - Patriots failed miseraly in both batting and bowling. Trinbago Knight Riders registered their 8th win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X