For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்துவரை பரபரப்பு.. சிபிஎல் இறுதிப்போட்டி.. நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணி த்ரில் வெற்றி - விவரம்

வார்னர் பார்க்: கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி கடைசி பந்து வரை பரபரப்பாக சென்று செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரை போன்று மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்படும் உள்நாட்டு தொடர் தான் கரீபியன் பிரீமியர் லீக்.

இந்தாண்டுக்கான தொடர், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் சிறப்பாக விளையாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

ஐபிஎல்-ல் சம்பவம் இருக்கு.. சிபிஎல்-ல் மிரட்டல் சதம் கொடுத்த டூப்ளசிஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!ஐபிஎல்-ல் சம்பவம் இருக்கு.. சிபிஎல்-ல் மிரட்டல் சதம் கொடுத்த டூப்ளசிஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்ட்ரே ஃப்ளெட்சர் 7 பந்தில் 11 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கார்ன்வால் அதிரடியாக ஆடி 32 பந்தில் 43 ரன்கள் அடித்தார். மார்க் டீயல் ஒரு ரன்னிலும், டேவிட் வீஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவர் அதிரடி

கடைசி ஓவர் அதிரடி

நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ரோஸ்டான் சேஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் அந்த அணி 128 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. 18 ஓவர்கள் முடிந்துவிட்டன. கடைசி 2 ஓவர்கள் மட்டுமே மீதம் இருக்க, களமிறங்கிய கீமோ பால், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். அதே போல கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் விளாச அந்த அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் 20 ஓவரில் 159 ரன்கள் அடித்த கிங்ஸ் அணி, கோப்பையை வெல்ல பாட்ரியாட்ஸ் அணிக்கு 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

நம்பிக்கையுடன் களமிறங்கிய பாட்ரியாட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் டக் அவுட்டும், எவின் லீவிஸ் 6 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஜோஸுவா சில்வா 37 ரன்களும், ரூதர்வோர்ட் 25 ரன்களும் எடுத்து வெளியேறினர். பொறுப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டுவைன் பிராவோ 8 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் அந்த அணி 95 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

பின்னர் டாம்னிக் ட்ரேக்ஸ் மற்றும் ஃபேபியன் ஆலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஃபெபியன் 20 ரன்களுக்கு வெளியேறினார். இதனையடுத்து வந்த காட்ரோல் 5 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி ஓவரின் போது ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அபார வெற்றி

அபார வெற்றி

கடைசி ஓவரின் போது அந்த அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சிங்கில், டபுள்ஸ் என செல்ல, கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சாதூர்யமாக செயல்பட்ட கெஸ்ரிக் வில்லியம்ஸ் பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. பின்னர் அதனை சிங்கிள் அடிக்க செயிண்ட் கிட்ஸ் நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது.

Story first published: Thursday, September 16, 2021, 17:22 [IST]
Other articles published on Sep 16, 2021
English summary
St Kitts and Nevis Patriots beats Saint Lucia Kings by 3 wickets in CPL Final, won the champion trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X