For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிட்னியில் பரவிவரும் கொரோனா... 3வது போட்டி நடக்குமா... தவிப்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3வது டெஸ்ட் தொடர் சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விராட் கோலியோட ரன்-அவுட்... கிரிக்கெட் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அவமானம்... ஷேன் வார்ன் கருத்து விராட் கோலியோட ரன்-அவுட்... கிரிக்கெட் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அவமானம்... ஷேன் வார்ன் கருத்து

இந்நிலையில், சிட்னியில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சிட்னியில் 3வது போட்டி

சிட்னியில் 3வது போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கிடையில் இந்த போட்டியுடன் சேர்த்து 4 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

28 பேருக்கு கொரோனா பரவல்

28 பேருக்கு கொரோனா பரவல்

இந்நிலையில் சிட்னியின் கொரோனாவின் இரண்டாவது அலை காணப்படுகிறது. வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் 28 பேர் கொரோனா வைரசால் பாதிப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆலோசனை

கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆலோசனை

இந்நிலையில் சிட்னியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி

கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி

இந்த கொரோனா சூழலை அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகவும், அதனால் தாங்கள் எந்தவிதமான பதற்றமும் இன்றி இந்த சூழலை பொறுமையாக எதிர்கொள்வதாகவும் சிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் 3 நாட்களுக்கு தங்களது வீடுகளில் முடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Friday, December 18, 2020, 14:39 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
Our medical experts have been working around the clock -CA
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X