இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு

சிட்னி : கொரோனா பீதி காரணமாக வரும் அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நடத்தப்பட இருந்த சர்வதேச டி20 போட்டிகளை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது.

Australia vs West Indies T20 series postponed

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பைக்கு முன்னதாக வார்ம்-அப் போட்டிகளாக இந்த போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎல் டி20 தொடர் தள்ளிவைப்பு.. கொரோனா வைரஸ்.. ஐபிஎல்.. இந்த ஆண்டு கடினம்!

டி20 உலக கோப்பை தள்ளிவைப்பு

டி20 உலக கோப்பை தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை தொடர் தற்போது அடுத்த ஆண்டு, அல்லது அதற்கு அடுத்த ஆண்டிற்கு ஐசிசியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் சரியாக அட்டவணை திட்டமிடப்படவில்லை.

பல்வேறு போட்டிகள் ரத்து

பல்வேறு போட்டிகள் ரத்து

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பலவித பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பல நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஆஸ்திரேலியாவும் டி20 உலக கோப்பையை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்ததையடுத்து டி20 உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தள்ளி வைப்பு

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தள்ளி வைப்பு

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக குயின்ஸ்லாண்டில் வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் வார்ம் அப் போட்டிகளாக திட்டமிடப்பட்டிருந்த 3 போட்டிகளை கொண்ட சர்வதேச டி20 தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடவடிக்கை

ஐசிசி உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்படவிருந்த வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா தள்ளி வைத்துள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: t20 டி20 தொடர்
English summary
CA postpones the T20I series against the Caribbeans scheduled in October
Story first published: Tuesday, August 4, 2020, 11:13 [IST]
Other articles published on Aug 4, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X