For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு, பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டும் மவுனம் சாதித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது., பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்

இந்நிலையில், வரும் மே மாதம் தொடங்கி நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.

கருத்து கூறாத இம்ரான்

கருத்து கூறாத இம்ரான்

இது தொடர்பாக அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பப்னா பேசுகையில், புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதுவரை எந்த கருத்தும் கூற வில்லை.

வாய் திறக்காதது ஏன்?

வாய் திறக்காதது ஏன்?

தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அது குறித்து அந்நாட்டின் பிரதமர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்? புல்வாமா தாக்குதல் குறித்து வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

உண்மை நிலை என்ன

உண்மை நிலை என்ன

உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் அவர்களின் பக்கம் ஏதோ தவறு இருக்கிறது என்றால் பொருள்.

மறைக்கப்பட்ட புகைப்படம்

மறைக்கப்பட்ட புகைப்படம்

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இருந்த இம்ரான்கானின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எப்படி அகற்றுவது என்பது குறித்து முடிவெடுப்போம் என்று சுரேஷ் பப்னா கூறியிருக்கிறார்.

Story first published: Sunday, February 17, 2019, 19:30 [IST]
Other articles published on Feb 17, 2019
English summary
Cricket Club of India has urged BCCI not to play with Pakistan in the World Cup cricket match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X