For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியா இப்படி செய்தது? ஏற்றுக்கொள்ளவே முடியாது.. வரிசையாக சுற்றிவளைக்கும் ஜாம்பவான்கள்.. சர்ச்சை!

அகமதாபாத்: அகமதாபாத் பிட்ச் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் பரபரப்பாக சென்ற அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா தூசி தட்டியுள்ளது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் நேற்று சிறப்பாக பந்து வீசினார்கள்.

அரசியல் சாயம் பூச வேண்டாம்.. பொங்கி எழுந்த அஸ்வின்.. அடேங்கப்பா இவ்வளவு கோபமா? என்னாச்சு அரசியல் சாயம் பூச வேண்டாம்.. பொங்கி எழுந்த அஸ்வின்.. அடேங்கப்பா இவ்வளவு கோபமா? என்னாச்சு

10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி உள்ளது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கோலி

கோலி

இந்த நிலையில் அகமதாபாத் பிட்ச் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கோலி தனது பேட்டியில் பிட்ச் மோசமாக இருந்தது என்று சொல்ல முடியாது. இந்திய பவுலர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். முதல் இரண்டு நாட்கள் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலைதான் இருந்தது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

அதிலும் 30 விக்கெட்டில் 21 விக்கெட் நேராக வந்த பந்து மூலமே விழுந்த விக்கெட் ஆகும். டெஸ்ட் போட்டி என்பது தடுப்பு ஆட்டத்தை பொறுத்ததாகும். இதை தவறவிட்ட காரணத்தால்தான் இந்த போட்டியில் அதிக விக்கெட் விழுந்தது.மற்றபடி பிட்ச் மீது முழு பழியையும் போட முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

வருத்தம்

வருத்தம்

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்திற்கு ஆதரவாக கோலி பேச கூடாது, அது கோலியின் வேலை இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டார் குக் கோலியை விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர் டேவிட் லைய்டும் கோலியை விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் கோலியை விமர்சனம் செய்துள்ளனர். அதில், அகமதாபாத் பிட்சுக்கு ஆதரவாக கோலி பேச வேண்டிய அவசியம் இல்லை. அது அவருடைய வேலை இல்லை. பிட்சை உருவாக்கியது அவர் இல்லை.

தவறு

தவறு

கோலி பிட்ச் குறித்து பேச கூடாது. ஏன் பிசிசிஐயும் இதை தலையிட கூடாது. அந்த மைதானத்தின் பராமரிப்பாளர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள்தான் பிட்சில் என்ன பிரச்சனை என்று சொல்ல வேண்டும், என்று இங்கிலாந்து விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்றுக்கொள்ள முடியாது

ஏற்றுக்கொள்ள முடியாது

கோலியின் பேச்சை இங்கிலாந்து விமர்சகர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அகமதாபாத் பிட்ச் மீது இங்கிலாந்து வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிராக சதி செய்யப்பட்டுவிட்டது என்று இங்கிலாந்து ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Story first published: Saturday, February 27, 2021, 9:43 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
Cricket experts didn't like Indian skipper Kohli defending the Ahmedabad pitch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X