ஏய்…! பிராடு.. !! எல்லோர் முன்னிலையில் அழைத்த ரசிகர்.. மூக்குடைத்த அதிரடி வீரர்.. வைரல் வீடியோ

Watch Video : David Warner gives epic reply to English crowd chanting

மான்செஸ்டர்: ஏமாற்றுக்காரர் என்று அழைத்த ரசிகர் மீது கோபம் காட்டாமல் ஆஸி. வீரர் வார்னர் உற்சகமாக கைகளை தூக்கி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் எப்போது பார்த்தாலும் ஏமாற்றுக்காரர் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இப்போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் தொடங்கி உள்ளது. தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டபுள் செஞ்சுரி

டபுள் செஞ்சுரி

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 497 ரன்கள் குவிந்தது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடித்து இங்கிலாந்தை காலி செய்தார். பல்வேறு அவமானங்களுக்கு இடையே, சாதனைகளையும் உடைத்தெறிந்தார்.

தடைக்கு பின் பார்ம்

தடைக்கு பின் பார்ம்

முன்னதாக, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பிய இருவரும் நல்ல பார்மில் உள்ளனர்.

ஆஸி. பீல்டிங்

ஆஸி. பீல்டிங்

வார்னர் உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தையும், ஸ்மித் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வருகிறார். இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தின் ஓய்வு அறையிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பீல்டிங் செய்ய களத்திற்கு வந்தனர்.

ரசிகரின் செயல்

ரசிகரின் செயல்

அப்போது வார்னர் வெளியே வரும்போது ரசிகர் ஒருவர் ஏமாற்றுக்கார் என்று அழைத்தார். வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் ரசிகரின் இந்த செயலை கண்டு, ஒரு வீரர் ஆத்திரம் அடைவதை பார்த்திருக்கிறோம்.

வார்னர் மகிழ்ச்சி

வார்னர் மகிழ்ச்சி

ஆனால், அதற்கு நேர் எதிராக நடந்து கொண்டிருக்கிறார் வார்னர். சற்றும் கோபமடையாத வார்னர் அவரை பார்த்து உற்சாகமாக 2 கைகளையும் தூக்கி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஆரவாரம்

ஏமாற்றுக்காரா என்று அழைத்த ரசிகரின் மூக்கை உடைக்கும் விதமாக வார்னரின் செயல் இருந்தது. அந்த ரசிகர் மீது அவர் எந்தவித கோபமின்றி சிரித்தபடியே அங்கிருந்து விடைபெற்றது அனைவரையும் கவர்ந்தது. மற்றவர்கள் ஆரவார கூச்சலிட்டு வார்னருக்கு, ஆதரவை மைதானத்தில் வெளிப்படுத்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Cricket fan says david warner cheater, video goes viral.
Story first published: Sunday, September 8, 2019, 15:44 [IST]
Other articles published on Sep 8, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X