For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னது..? பர்கர் சர்பிராஸ் கேட்சும், தோனி கேட்சும் ஒண்ணா.? சகட்டுமேனிக்கு விளாசிய ரசிகர்கள்..!!

Recommended Video

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் தோனி பிடித்த கேட்ச்

லண்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோனி பிடித்த கேட்சை, சர்பிராசுடன் ஒப்பிட்ட, ஐசிசியை சகட்டுமேனிக்கு ரசிகர்கள் கழுவி ஊற்றுகின்றனர்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான உலகக்கோப்பை போட்டி மான் செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்தது. இதில் அதிக பட்சமாக விராட் கோலி 72 ரன்களும், குல் 48 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 46 ரன்களும் எடுத்தனர்.

கடந்த போட்டியில் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட தோனி இப்போட்டியில் 56 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினார். இதனை அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வென்றது. இப்போட்டியில் பும்ரா வீசிய 27 -வது ஓவரில் மேற்கிந்திய வீரர் ப்ராத்வொய்ட் அடித்த பந்தை தோனி பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தோனி கேட்ச்

தோனி பிடித்த இதேமாதிரியான ஒரு கேட்ச்சை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பிடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் டைவ் அடித்து அந்த கேட்ச் பிடித்தார். இந்த 2 கேட்சுகளுமே ஒரே மாதிரியாக இருந்ததால், எது சிறந்தது என ஒரு கேள்வியை எழுப்பி ஐசிசி டுவீட் செய்திருந்தது.

ஒப்பிடக்கூடாது

ஒப்பிடக்கூடாது

ஆனால்...இது தான் தற்போது வம்பாக போய்விட்டது ஐசிசிக்கு. தோனியை யாருடனும் ஒப்பிடக்கூடாது, அதுவும் குறிப்பாக பர்கர் புகழ் சர்பிராசுடன் ஒப்பிடவே கூடாது என்று பொங்கி தள்ளிவிட்டனர் ரசிகர்கள்.

தோனி பிட்னஸ்

தோனி பிட்னஸ்

அதிலும் குறிப்பாக, இருவரின் பிட்னஸ் குறித்து ரசிகர் ஒருவர் கூறியிருந்த விஷயம் தான் டாப்கிளாஸ். தோனி பிட், அதனால் தான் விழுந்தவுடன் எழுகிறார். ஆனால், விழுந்தபின்னர் தானாக எழமுடியாத சர்பிராசை ஸ்லிப்பில் நின்ற மற்றொரு வீரர் கை தூக்கி விட்டார். இதையும் ரசிகர்கள் விடவில்லை, கலாய்த்து தள்ளிவிட்டனர் என்று சொல்லலாம்.

Story first published: Friday, June 28, 2019, 14:55 [IST]
Other articles published on Jun 28, 2019
English summary
Cricket fans criticizing icc for comparing dhoni diving catch and sarfaraz catch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X