For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்..! ஓட்டு போடுவோம்… நெட்டிசன்ஸ் கலாய்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கை ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி தனி ஒருவனாக போராடினார்.

எதிரணி பந்துவீச்சை வெளுத்த தல தோனி, 48 பந்துகளில் 7 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் அவரது ரசிகர்கள் நூதன முறையில் கொண்டாட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

தோனி தான் பிரதமர்

அதாவது தோனிதான் அடுத்த பிரதமர் என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்துள்ளனர். மோடி, ராகுலை இப்போது மறந்துவிடுங்கள்... தோனி தான் அடுத்த பிரதமர் என்று அவர்கள் முழங்கி வருகின்றனர்.

அரசியலை தேர்ந்தெடுங்கள்

தோனியை இந்த மக்கள் விரும்புகின்றனர்... எனவே, கிரிக்கெட்டுக்கு பின்னர் அரசியலை தேர்ந்தெடுங்கள், உங்களை பிரதமராக்குகிறோம் என்று தன்மய் பரத்வாஜ் என்ற ரசிகர் வரவேற்றிருக்கிறார்.

மோடி, ராகுலை மறப்போம்

அதில் விஸ்வாஸ் திவேதி என்ற ரசிகர் கூறியிருப்பது தான் ஹைலைட். இப்போது மோடி, ராகுல் ஆகியோரை மறந்துவிடுங்கள்... நாம் தோனியை பிரதமராக்குவோம் என்று கூறி இருக்கிறார்.

வாக்களிப்போம்

அபிஷேக் சிங் என்பவர்... தோனி பிரதமருக்கு நிறுத்தப்பட்டால் அவருக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சந்தீப் லிங்க்வெல் என்பவரும் தோனிக்கு ஓட்டு போட தயார் என்கிறார்.

Story first published: Tuesday, April 23, 2019, 0:05 [IST]
Other articles published on Apr 23, 2019
English summary
Cricket fans ready to vote dhoni if he contested in election for prime minister.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X